உளவு நிறுவனங்கள்!…. (பகுதி 10) …. க.வள்ளிமகன்.

உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளின் மூலப்பொருள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்த மூலப்பொருளின் பலனையே மக்கள் தமக்குரியதாக கொள்வர்.உணவு உற்பத்தியில் பதனிடப்படும் காய்கறிவகை உணவின் மூலப் பொருளை நீண்ட நாட்களுக்கு பின்னரும் பாவனைக்கு ஏற்றபடியும் அதிலிருக்கும் மூலப்பொருளின் மூலக்கூறுகளான சத்துக்கள் அழிந்து போகாமலும் இருப்பதை உற்பத்தியாளன் உறுதிப்படுத்த வேண்டியவனாக இருக்கிறான்.
பாவனையாளன் தான் விரும்பும் ஒரு போத்திலில் அடைக்கப்பட்ட காய்கறிப் பொருளை வாங்கும் போது, அதனுடைய சத்து தனது உடலுக்கு தேவையானதாகவும்,அதன் சுவை மாறாமலிருப்பதையும் பதப்படுத்தலுக்காக பயன்படுத்தப்படும் வேதியல் பொருளினால் தனது உடலுக்கு பாதக விளைவுகள் ஏற்படாமலிருப்பதையும் உறுதிப்படுத்தியதை அப்போத்தலின் வெளிப்புறத்தில் காணப்படும் விபரத்திற்கமையவே அதனை வாங்குகிறான்.
உளவு நிறுவனங்கள் தொழிற்சாலை உற்பத்திகளைச் சிதைப்பதில் மிக நுணுக்கமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றன.
உதாரணமாக உற்பத்திப் பெபாருளாக இருக்கும் ஒரு காய்கறியின் மூலக்கூறுகள் யாவும் ஒவ்வொரு வேதியல் பொருளின் தன்மைகளைக் கொண்டது.இந்த வேதியல் பொருள் ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புக்களுக்குத் தேவையானவை.அதே வேளை இவ்வேதியல்
பொருட்கள் யாவும் ஒன்றுக்கு ஒன்று இசைவுள்ளவையாகவும்,ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால் எதிர்வினை அல்லது பாதக விளைவுகளை ஏற்படுத்துபவனாகவும் இருக்கும்.
இந்த நிலையில், ஒரு காய்கறியின் வேதியல் மூலக்கூற்றினை சிதைக்காமலும் அதே வேளை பதப்படுத்தலை உறுதி செய்யும் நிலையினைக் கொண்டதாகவும் பதப்படுத்தலுக்குப் பயன்படும் திரவ திட வேதியல் பொருள் இருத்தல் மிக முக்கியம்.தவறான வேதியல் பொருளை பதப்படுத்தலுக்கு பயன்படுத்தும் போது மூலப்பொருளின் வேதியல் மூலக்கூறுகளை சிதைத்து அழித்துவிடுவது மட்டுமல்ல அவற்றுடன் ஒத்துப்போகாது நஞ்சாக மாற்றிவிடும்.
போத்தலில் அடைக்கப்பட்ட உணவுப் பொருளின் தவறான வேதியல் நிலைப்பாட்டினால் பாதக விளைவு ஏற்பட்டு அதை உண்பவர் நோய்க்குள்ளாவதுடன் மெதுவான இறப்புக்கு உட்படும் நிலை ஏற்படும்.
அதே வேளை பதப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் திரவ திட பொருள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே எதிர்வினை ஆற்றாது.குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அந்தப் பதப்படுத்தல் உணவை உண்பவர்களுக்கு அது உடல் பாதிப்பை எற்படுத்தி அதுவே நோயாக மாறும் அபாயம் உண்டு.
இன்னும் குறிப்பாகக் கவனித்தால் ஏற்கனவே ஏதாவது நோயுற்றவராக ஒருவர் இருந்து அத்தகு உணவை உண்பாரானால் மிகப் பெரிய உடல்நலக்குறைவை எற்படுத்தும்.
உடல் வேதியல் பொருட்களாலேயே ஆக்கப்பட்டிருந்தாலும் உண்ணும் உணவின் வேதியல் பொருட்களின் பிரதிபலித்தல் முரண்பாடுடையவையாக இருப்பின் அது உடலுக்கே கேடு விளைவிக்கும்.
ஒரு நாட்டைச் சீரழித்து தனது நாட்டை மேன்மை நிலைக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டுக்கான உளவு நிறுவனங்களின் பெரும் திட்டமிடலாக அரசியல், அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,முப்படைகள், மண்ணும் கனிவளங்களும்,நீர்நிலைகள்,உணவு வகைகள், காற்று, கல்விசார் பல்கலைக்கழகங்கள், சுற்றுலாத்துறை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றுக்கான பாரிய வலைப்பின்னல் உலகநாடுகளை ஆக்கிரமித்திருந்த போதிலும் சாதாரண குடிமகனால் இதனை அறிந்து கொள்ள முடிவதில்லை.நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையைப் பேணும்
ஒப்பந்தங்கள் எனவும் பிராந்திய ரீதியாக அணி சேர்ந்துள்ள நாடுகள் எனவும் அவற்றின் வெளிப்பாடுகளை ஊடகங்கள் வெளிக் கொணரும் போது எல்லா நாடுகளும் ஒற்றுமையாக இருப்பதாக ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
கருவறுத்தல் என்ற ஒரு சொல் தமிழ் வழக்கில் வஞ்சகத்தை வெளிப்படுத்த பாவிக்கும் சொல்லாகும்.அதனை வல்லரசு நாடுகள் நலிந்த நாடுகள் மீது பாவிக்கின்றன என்பது உண்மையே.
இந்த வகையிலேதான் உணவின் மீதான தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டு மக்களை நோயாளிகளாக்குவது அல்லது சுகதேகிகளற்றவர்களாக்குவது என்பதாகும்.மரபணுச் சிதைவுக்குட்பட்டு உடல் உறுப்புச் சிதைவுற்றவர்களாகவும் மூளை வளர்ச்சியடையாதவர்களாக ஆக்குவதும் இந்த உளவு நிறுவனங்களே ஆகும.;
ஒரு நாட்டுக்கும் ஆரோக்கியம் உண்டு. அது மக்களின் நோய் நொடியற்ற வாழ்வேயாகும். ஒரு நாட்டினுடைய பெரிய செல்வமே அரோக்கியமான மனிதர்களே. ஆரோக்கியமான மனிதர்களிடமிருந்தே அரோக்கியமான வலுவுள்ள சந்ததி உருவாகும்.
ஆரோக்கியமான சந்ததி விருத்திக்கு ஒரு ஆணினுடைய விந்தும், விந்தணுக்களும் பெண்ணினுடைய கரு முட்டையும் ஆரோக்கியமானதாக இருத்தல் வேண்டும்.
தவறான உணவுப்பழக்க வழக்கங்களால் விந்தணுவும் கருமுட்டையும் அதன் வீரியத்தை இழந்தவிடும். பதப்படுத்தல் உணவுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நன்குணர்ந்த உளவு நிறுவன உணவு விஞ்ஞானிகள் தெளிவாகவே செயல்படுகின்றனர்.
ஒரு உணவு உற்பத்தித் தொழிற்சாலையின் பணியிலிருக்கும் உளவு பார்க்கும் நாட்டு தொழில்சார் அதிகாரிகள் பதப்படுத்தப்படும் உணவின் ஆரோக்கியமான தன்மையை நஞ்சாக மாற்றுவதற்கு பதப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் திட திரவ வேதியல் பொருட்களின் அளவினை குறைத்தோ அதிகரித்தோ அத்தொழிற்நசாலையின் சுதேச அதிகாரிகளுக்கு தெரியாதவகையில் சேர்க்கிறார்கள் அல்லது அப்படிச் சேர்ப்பது தவறில்லை என சுதேச அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நியாயப்படுத்துகின்றார்கள்.
உளவு நிறுவனங்களுக்கு விலைபோகும் சுதேச அதிகாரிகளும் உளவு நிறுவனங்களின் ஒற்றர்களாக செயல்படுகிறார்கள்.ஒரு உணவுப்
பொருளின் வேதியல் சிதைவினால், இவ்வுணப் பொருளைப் பயன்படுத்தி உடல்நலக்குறைவானார்கள் என்ற செய்தியை பொதுமக்கள் அறியும் பொது அப்பொருளை வாங்காது விட்டுவிடுவார்கள்.எனவே தொழிற்சாலை நட்டமடையும் போது அதனால் தேச நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
பணம்,பெண், பொருள் என்பவற்றை கொடுத்தாவது ஒற்றர்களை உருவாக்குவது அல்லது உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியாவது உளவு நிறுவனங்கள் தமது உளவு வேலையைச் செய்யும்.
(தொடரும்)
![]()