முகநூல்

பாண்டிருப்பு மாணவன் லதுசன் சாதனை!… செ.துஜியந்தன்.

இம்முறை வெளியாகியள்ள க.பொ.த உயர்தரப் பரிட்சை பெறுபேறுகளில் அம்பாறை பாண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த வில்வராஜா லதுசன் கலைப்பரிவில் ;பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரிட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்றுள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவனான வில்லராஜா லதுசன் முதற்தடவையாக கணிதப் பிரிவில் கல்வி கற்று பரிட்சையில் சித்தியடையத் தவறியிருந்தார்.
அதன் பின்னர் இரண்டாவது தடவையாக கலைப்பிரிவை தெரிவு செய்து ஊக்கமுடன் கல்வி கற்று தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரிட்சைக்குத்தோற்றி இன்று அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப்பெற்று; கிராமத்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

இவர் கலைப்பிரிவில் கணிதப்பாடத்தில் ஏ சித்தியும், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியல்பாடத்தில் பி சித்தியும், வணிகப்புள்ளி விபரவியல் பாடத்தில் சீ சித்தியும் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *