கவிதைகள்
காதலை யாவரும் கருத்தினில் இருத்துவோம்!….( கவிதை…. ) கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண்.

இனிமையும் மென்மையும்இணைந்ததே காதல்தனிமையும் தழுவலும்தருவதே காதல்பனிவிழும் மலரெனமலர்வதே காதல்பாரினில் காதல்தான்பலருக்கும் மகிழ்வே !வானத்தின் வரமாய்மழைமண்ணில் வீழும்மண்ணது நிறமாய்மாறிடும் நீரும்அன்புடை அகத்தில்அமர்ந்திடும் காதல்ஆனந்த பரவசம்அளித்துமே நிற்கும் !இருமனம் இணைந்தால்எழில்பெறும் காதல்மதமதும் பாராஇனமதும் பாராதுணிவுடன் எழுந்துதுளிர்த்திடும் காதல்நிலமதன் மீதில்நிமிர்ந்துமே நிற்கும் !மானிட வாழ்விலே
மாபெரும் சக்திமறுவிலாக் காதல்மலர்வது அன்றோகனவிலும் நனவிலும்பெருகிடும் காதல்காத்திரம் அளிக்கும்காதலாய் அமரும் !காதலை எண்ணுவார்களிப்புடன் இருப்பார்காதலைப் போற்றுவார்கனிவுடன் பேசுவார்காதலை இணைப்பார்கண்ணியம் மிக்கவர்காதலை யாவரும்கருத்தினில் இருத்துவோம் !
![]()