Wednesday, November 22, 2017

.
Breaking News

கண்டிப்பாக செய்து காட்டுவேன்: லாராவுக்கு சவால் விடும் முத்தையா முரளிதரன்!

முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது.
இந்த தொடரில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த தொடரில் முரளிதரன் ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கும், லாரா லியோ லயன்ஸ் அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் முரளிதரன், லாராவிற்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் நான்கு முறைதான் அவரை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் லாராவை மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் போட்டியில் வீழ்த்திக் காட்டுவேன் என்று முரளிதரன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், \”சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர்கள் சிறந்த வீரர்கள். இதில் லாராவுக்கு தற்போது 46 வயதாகிறது.

ஆனால் நான் அவரை விட மூன்று வயது இளையவன். எனவே லாராவை எளிதில் கட்டுப்படுத்தி விடுவேன்\” என்று கூறியுள்ளார்.

சச்சின் – வார்னே நடத்திய ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த தொடர் நடத்தப்படுகிறது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி வழங்கி உள்ளது.

About The Author

Related posts