Thursday, January 18, 2018

.
Breaking News

சிம்புவுக்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர்!

சிம்புவுக்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர்!

இணையதளத்தில் வெளியான சிம்புவின் பீப் பாடலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
3ba1b74f-2da2-494f-9a52-4d5483d65536_S_secvpf

நடிகர் சிம்பு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் பாடியதாக இணையதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வெளியேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி சிம்பு அனிருத்துக்கு எதிராக புகார்கள் அளித்தனர்.

போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வரும் நிலையில் அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். சிம்புவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடிகர்கள் கடந்த 2 நாட்களாக குரல் கொடுத்து வருகின்றனர்.

சிம்பு பாடியது தவறல்ல என்று ஒரு சில நடிகர்களும் அவர் பாடியது கண்டனத்துக்குரியது என வேறு சில நடிகர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் சிம்பு ரசிகர்கள் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சிம்புவுக்கு தெரியாமல் அவரது பாடலை யூ டியூப்பில் வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிம்பு ரசிகர்கள் தெரிவிக்கையில் காலம் காலமாக தமிழ் படங்களில் மட்டும் இல்லாது இந்திய சினிமாவில் இலை மறை காயாக ஆபாச வரி பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. கவிஞர் வாலி முதல் கொண்டு இசை அமைப்பாளர் இளையராஜா வரை யாரும் இந்த விமர்சனத்திற்கு தப்ப வில்லை.

தற்போது நடிகர் சிம்பு பாடியதாக ஒரு பாடலை அவருக்கு தெரியாமலேயே இணையதளத்தில் வெளியிட்டு அவரது வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.

About The Author

Related posts