Saturday, November 18, 2017

.
Breaking News

6 மாதங்களுக்குள் தீர்வு (இடம்பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதி யாழில் உறுதியளிப்பு)

வடக்கில் கடந்த 25 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பிரச்சினையை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் முழுமையாக தீர்த்து வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற் கென உடனடியாக செயலணி ஒன்றை உரு வாக்குவதாகவும் யாழில் உறுதியளித்துளளார்.

தேசிய நத்தார் பண்டிகை நிகழ்வு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ் மாநகர சபை மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நத்தார் என்பது உலகில் உள்ள அனை த்து மக்களுக்கும் சமாதானம் அன்பு செலுத்துகின்ற நாள் ஆகும். அதனால்தான் அனைவரும் அதைகொண்டாடுகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தேவைப்படுவது மிகவும் சுதந்திரமாகவாழ வேண்டும் என்பதுதான்.
எனவே இலங்கையராகிய நாம் அனை வரும் ஒற்றுமையாக வாழ ஒன்றுபட வேண் டும். நத்தாரின் சமாதானசெய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

இந்த நாட்டில் 26 வருடங்களுக்கு மேலாக மிகவும் மோசமான யுத்தம் நிலவியது. 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்தது. நாட்டில் சமாதானம் வந்தது. ஆனால் பிரச்சினைகள் முடிவு பெறவில்லை. முக்கியமாக யுத்தம் ஏற்பட்டதற்கான காரணத்தை தேடிப்பார்ப்பது அவசியம். அதை கண்டுபிடித்து அதற்கான பரிகாரம் காணப்படவேண்டும். இந்தநாட்டில் தேசிய பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறவர்கள் யுத்தம் ஏன் உருவானது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். யுத்தம் முடிந்து சமாதானம் உருவானது. ஆனால் பிரச்சினை முடியவில்லை என்று அதனால்தான் நான் கூறினேன்.

கடந்த 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் இப்பிரச்சினையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் முழுமையாக தீர்த்துவைப்பேன் என உறுதியளிக்கிறேன். இதற்காக செயலணி ஒன்றை உருவாக்கி அதில் அரசியல் தலைவர்கள், முப்படையினர், பொலிஸார், மக்கள் இயக்கத்தினரை சேர் க்கவுள்ளேன். இப்பிரச்சினை மிக மிகவிரைவாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை புரிந்துள்ளேன்.

சத்தம் போடுகிறவர்கள் பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை என்று கூறி கடும் போக்குவாதிகள் அவசரமாக புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தை ஏற்படுத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட் டார்கள்.

மக்கள் வாக்குகள் இல்லாமல் எந்தவித சதித்திட்டத்தின் மூலமாகவும் எந்த அரசையும் உருவாக்க இடமளிக்கமாட்டோம். பொது வான சில விடயங்களை வைத்து நாட்டுக்கு சேவை செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள் என கோருகிறேன். நாட்டு மக்களின் சுதந்திரம், சமாதானத்து க்காக ஒன்றிணையுங்கள். ஏழ்மை வறுமை இல்லாது ஒழிக்க ஒன்றுபடுங்கள் என அவர் தெரிவித்தார்.

About The Author

Related posts