Saturday, February 24, 2018

.
Breaking News

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தபால் அட்டைப் பரப்புரை !‏

சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தபால் அட்டைப் பரப்புரையொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாநிலைப் போராட்டம், டிசெம்பர் 15ம் திகதி வரையிலான காலக்கெடுவுடன் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கைதரும் நடத்தைகள் சிறிலங்கா அரச தரப்பில் இல்லாத நிலையில், இவ்விவகாரத்தினை அனைத்துலக சமூகம் நோக்கி கொண்டு செல்லும் பொருட்டு இத்தபால் அட்டைப் பரப்புரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் டிசெம்பர் 15ம் திகதி முதல் தொடங்கியுள்ளது.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகளின விடுதலை வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களுக்கும், ஐ.நா தீர்மானத்தினை முன்வைத்திருத்த கூட்டுநாடுகளை நோக்கியும் இத்தபால் அட்டைப் பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது.

தபால் அட்டையின் முற்பகுதியில் பின்வருமாறு Sri Lanka: Release All Tamil POWs immediately ! Continued indefinite detention constitute serious breaches of international law / Sri Lanka: Honor your commitments given to the POWs for which they suspended their previous hunger strikes/ Intervention of the international community necessary for international justice for Tamils அமைந்துள்ளதோடு, பிற்புறத்தில் Nearly 200 Tamil prisoners connected to the armed conflict in Sri Lanka — which ended in 2009 — are still held in detention in Sri Lanka. Some have been held for more than 12 years without charge. On October 12, 2015 and November 7, 2015, prisoners began hunger strikes which were later suspended after some time due to assurances given by the Sri Lankan government that their cases would be seriously considered and expedited. During the hunger strikes some of the POWs’ health deteriorated significantly. The prisoners have resumed their hunger strike on December 15 because these assurances have not been fulfilled. It is high time for the international community to clamor for justice for Tamil POWs. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் அட்டையினை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் குறித்த https://secure.avaaz.org/en/petition/UN_High_Commissioner_for_Human_Rights_the_Honorable_Zeid_Raad_Al_Hussein_Sri_Lanka_Release_All_Tamil_POWs_immediately/?nfQCZjb இந்த இணைய வழிமூலம் ஒப்பமிட்டுக் கொள்ளலாம் என நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
images (88)

நாதம் ஊடகசேவை

About The Author

Related posts