Thursday, June 22, 2017

.

சென்னையில் வெள்ள மீட்பு பணியில் முப்படைகள் தீவிரம்;

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் சென்னையில் வெள்ள மீட்பு பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப்பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். புவனேஸ்வரில் இருந்து அரக்கோணத்திற்கு வந்துள்ள ராணுவ மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு குழு, 4 இந்திய ராணுவ குழுக்கள் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக வெள்ளப்பகுதியில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, 4 மீடியம் லிப்ட் ஹெலிகாப்டர்கள், ஒரு அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர், 5 சீட்டா ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ஒரு C-130J மற்றும் இரண்டு C-17 ராணுவ விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து நிவாரண உதவிகளை பெறுவதற்காக திருப்பதியில் ஒரு ஹெலிகாப்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
images

சென்னையில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் 40 ராணுவ மீட்பு படைக் குழுக்களும் 5 பொறியியல் நிபுணர்கள் கொண்ட குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முடிச்சூர், தாம்பரம், பல்லாவரம், கோட்டூர்புரம், திருநீர்மலை, ஊரப்பாக்கம், தி.நகர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் மீட்பு பணி நடந்து வருகிறது. செயிண்ட்.தாமஸ் மவுண்ட் மிலிட்டர் ஆஸ்பத்திரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பெங்களூரு, செகந்திராபாத், ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் கூடுதலாக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 6 அடிக்கும் குறைவாக வெள்ளநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் இருந்து மக்களை மீட்க 30-க்கும் மேற்பட்ட ராணுவ டிரக் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

About The Author

Related posts