Thursday, January 18, 2018

.
Breaking News

கைதிகளை விடுவித்தால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம்!

தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுவித்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராவனா பலய அமைப்பு தமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உரிய பதிலை அளிக்காத பட்சத்தில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடப்போவதாகவும் எச்சரித்துள்ளது.

சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ராவனா பலய அமைப்பு கடந்தவாரம் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று மஜகர் ஒன்றைக் கையளித்திருந்தது.

அரசியல் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட ஆரம்பித்துவிடும் எனவும் ராவனா பலய அமைப்பு அச்சம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து கலந்துரையாட நேற்று வருகை தருமாறு ராவனா பலய அமைப்பிற்கு ஜனாதிபதி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி சென்றிருப்பதால் நேற்றைய சந்திப்பு இரத்து செய்யப்பட்ட போதிலும், ராவனா பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதனையடுத்து உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதி உரிய பதிலை அளிக்காவிட்டால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

About The Author

Related posts