Friday, February 23, 2018

.
Breaking News

மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே கொடூரமான புலிகள் விடுவிக்கப்பட்டனர்!

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே கொடூ­ர­மான 390 விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் எது­வித நிபந்­த­னையும் இல்­லா மல் விடு­தலை செய்­யப்­பட்­டனர். ஆனால் எமது ஆட்­சியில் அவ்வா­றான எவரும் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. எனவே நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு எவ்­வி­த­மான அச்­சு­றுத்­தலும் இல்லை. நாட்டின் தேசிய பாது­காப்­பிற்­கான முழுப் பொறுப்­பையும் அர­சாங்கம் ஏற்றுக் கொள்­கி­றது என்று நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்தார்.

கடு­மை­யான குற்­றங்­க­ளைப்­பு­ரிந்த, தண்­டனை விதிக்­கப்­பட்ட 56 புலி உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­ய­மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் 4 ஆம் இலக்க குழு அறையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற அர­சாங்­கத்தின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அமைச்சர் இங்கு உரை­யாற்­று­கையில்;
பயங்­க­ர­வாதச் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட 204 விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள், சந்­தேக நபர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 56 பேர் கடு­மை­யான கொடூ­ர­மான குற்­றங்­களைப் புரிந்­த­வர்கள். இவர்­களில் கதிர்­கா­மரின் தொலை­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள், சந்­தி­ரி­காவின் கூட்­டத்தில் குண்டு வைத்­த­வர்கள் என பலர் உள்­ளனர்.
இவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறையில் உள்­ளனர். 124 சந்­தேக நபர்கள் தொடர்பில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு வழக்­குகள் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

24 சந்­தேக நபர்கள் சிறு சிறு குற்­றங்கள் புரிந்­த­வர்கள். கடும் குற்­றங்கள் செய்­தோரும் இவர்­க­ளுக்குள் உள்­ளனர். இவர்­களில் 20 பேர் தமது குற்­றங்­களை ஒப்புக் கொண்­டுள்ளார்.
இந்த 20 பேரை விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவர்­களை பிணையில் தான் விடு­தலை செய்ய வேண்டும்.

ஆனால் இவர்­களின் விடு­த­லைக்­காக பிணை­யா­ளிகள் முன் வரா­மை­யினால் விடு­தலை தாம­த­ம­டை­கின்­றது. இவர்­களில் தண்­டனை விதிக்­கப்­பட்ட 56 பேரை விடு­தலை செய்ய மாட்டோம்.

ஏனை­யோரில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் இல்­லாத விடு­தலைப் புலி சந்­தேக நபர்கள் 39 பேரை பிணையில் விடு­தலை செய்­துள்ளோம். சட்­டமா அதி­பரின் திணைக்­க­ளத்தின் பரிந்­து­ரைக்­க­மை­யவே பணம் மற்றும் இரண்டு பேரின் பிணை­யி­லேயே இவர்கள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். நிபந்­த­னை­களும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு பிணையில் விடு­த­லை­யா­ன­வர்கள் மாதத்­திற்கு ஒரு­முறை பொலிஸ் நிலை­யத்தில் கையெ­ழுத்­திட வேண்டும்.

தேசிய பாது­காப்­பிற்­கான உத்­த­ர­வா­தத்தை முதன்­மைப்­ப­டுத்­திய அரசு அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. எனவே தேசிய பாது­காப்­பிற்கு எவ்­வி­த­மான அச்­சு­றுத்­தலும் இல்லை. அதற்­கான முழுப் பொறுப்­பையும் அரசு பொறுப்­பேற்­றுள்­ளது.

கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் வட­மா­காண சபைத் தேர்­த­லுக்கு முன்னர் பூஸா முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 390 புலி உறுப்­பி­னர்கள் இவர்கள் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் இருந்தும் விடு­விக்­கப்­பட்­டனர். அன்­றைய சட்­டமா அதிபர் மொஹான் பீரிஸின் பரிந்­து­ரையில் பொலி­ஸாரின் நேர்­முகப் பரீட்­சைக்கு உள்­வாங்கி விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

அதே­போன்று மஹிந்த ராஜபக் ஷவை கொலை செய்ய முயற்­சித்­துள்­ளார்கள் என சாட்­சி­யங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட சிவராஜ், சுபா கிருஷ்ணன் தலை­மை­யி­லான இரண்டு புலி உறுப்­பி­னர்கள் விசா­ர­ணை­க­ளின்றி வழக்கு தாக்கல் செய்­யப்­ப­டாது விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்பு சட்­டமா அதிபர் மொஹான் பீரிசின் பரிந்­து­ரையில் 22 புலி உறுப்­பி­னர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.
இவ்­வாறு கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் நிபந்­த­னையும் இல்­லாமல் பிணையும் விதிக்­காமல் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டனர். அப்­போ­தெல்லாம் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக எவரும் வாய் திறக்­க­வில்லை.

இன்று எமது அர­சாங்கம் சட்ட ரீதியாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிபந்தனைகளுக்கு அமையவே பிணையில் விடுதலை செய்கிறது. இன்று தமது அரசியல் இருப்பிற்காக ஒரு சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாட்டுக்குள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அச்சுறுத்துகின்றனர்.
எனவே நாட்டு மக்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான அச்சமும்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.

About The Author

Related posts