Friday, February 23, 2018

.
Breaking News

யாழ் முஸ்லீம்…புலிகள்…..!!

யாழ் முஸ்லீம்…புலிகள்…..!!

தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் யாழ்பாணத்தில் வசித்த முஸ்லீம்களை யாழ்பாணத்தை விட்டுத் துரத்தினார்கள் என்பதை மட்டும் வைத்து அரசியல் செய்பவர்களும், அதையே வைத்து தமக்கு கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் சோனகர்களும், அதைக் காட்டி நாம் மனிதவாதிகள், சிந்தனையாளர்கள் என்று முகவரி தேடுபவர்களும் இதற்கான நியாங்களை சீர்தூக்கிப்பார்ப்பது அவசியமானது.

யாழ்முஸ்லீம்கள் குற்றமற்றவர்கள், புலிகள்தான் வெறிபிடித்து அவர்களைக் கலைத்தார்கள் என்பது போல் புலிகளின் மேலுள்ள காழ்புணர்வுகளை மட்டும் கக்குவது அபத்தமானது. ஆண்டாண்டுகளாக வாழ்ந்த முஸ்லீம்களை அப்போது மட்டும்தான் கலைக்க வேண்டிய அவசியம் புலிகளுக்கு எதற்கு வந்தது? புலிகள் பக்கமுள்ள காரணங்கள் என்ன? நியாயம் என்ன? இந்த முஸ்லீம்கள் எப்போ யாழ்பாணம் வந்தார்கள்? புலிகளில் முஸ்லீம்கள் இருக்கவில்லையா? புலிகளுக்கு முஸ்லீம்கள் உதவவில்லையா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் தொக்கித்தான் நிற்கின்றன.
GetAttachment (1)

ஒரு கந்தசஷ்டியின் போது யாழ்முஸ்லீம்கள் யாழ்பாணத்தை விட்டு விரட்டப்பட்டார்கள் எனும் போது கொதித்தெழுந்து எழுதியவர்களில், நேரடியாக புலத்துப்புலி தொடர்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். இன்று மாவீரையாக (மாவீரராக) பிரகடணப்படுத்த முயலும் தமிழினி எனும் சிவகாமி என்பவர் அந்த முஸ்லீம் பெண்களின் நகை நட்டுகளைப் பறித்துக் கொண்டல்ல பிடுங்கிக் கொண்டு அவர்களை வெளியில் அனுப்பினார் என்ற செய்திகளை உறுதிப்படுத்தாத ஊடகங்களும், தனிநபர் செய்திகளும் வெளிவந்தன.
GetAttachment (3)

யாழ்முஸ்லீம்களின் பூர்வீகம் யாழ்பாணம் இல்லை என்றாலும் சில பரம்பரைகளாக அவர்கள் அங்கேதான் வாழ்ந்தார்கள் என்பதில்; ஐயம் இல்லை. இவர்களை உடனடியாக, 24மணித்தியாலங்களுள் வெளியேறுமாது புலிகள் அவசரமாக உத்தரவிடப்பட்டதற்குக் காரணம் என்ன? எமக்குக் கிடைத்த தகவல்களின்படி இவர்கள் இராணுவத்தின் உளவாளிகளாகத் தொழிற்பட்டார்கள். ஆதராங்களுடன் பிடிபட்டார்கள். யாழ்தமிழ்மக்களின் பேரழிவுக்குண்டுவீச்சுக்கு இராணுவத்துக்கு உதவினார்கள் என்ற உண்மையான தகவல்களை புலிகளின் உளவுப்படையால் முன்வைக்க முடியும். இதை ஒருசில இஸ்லாமியரின் நடவடிக்கை என்று எண்ணுதல் தப்பானது. திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்பதை இன்றும் உயிருடன் தப்பி புலத்தில் வாழும் புலிகள் இதை உறுதிப்படுத்துவார்கள்.

புலிகளின் வலயங்களுக்குள்ளும், தமிழ்மக்கள் செறிந்து வாழும் இடங்களுக்குள்ளும், இந்தச் சோனகர்கள் போத்தல், பித்தளை, அலுமீனியக் கொள்வனவாளர்களாக நுளைந்து துப்புத்துலக்கியதை புலிகளும் மக்களும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். அத்துடன் இந்த முஸ்லீம்கள் சென்று உளவுபார்த்த இடங்களில் தொடர்ந்து குண்டுவீச்சுக்களும், மக்கள் செறிந்த பகுதிகளை இடங்காட்டும் உளவு வேலைகளையும் இந்தச் சோனகர்கள் செய்தார்கள் என்பதை புலிகளால் உறுதிப்படுத்த முடியும். இவர்களை அங்கு வைத்துக் கொண்டு விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது அசாத்தியமானது என்பதை புலிகள் உணர்ந்தார்கள். பலதடவைகள் எச்சரிக்கையும், குறிப்பிட்டவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

யாழ்பாணத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவானது நேரடியாகப் பிரபாகரனின் உத்தரவின் பேரில் நடைபெறவில்லை என்பதையும் புலிகளில் தலைமைப் பதவிகளில் இருந்தவர்கள் விசனித்ததும் உண்டு. தாம் போராடும் இனம் ஒரு குறிப்பிட்ட சிறுகுழுமத்தால் அழிக்கப்படுவதை விரும்பாத விடுதலை அமைப்புக்கள் அச்சிறு குழுமங்களை அடியோடு அழிந்திருக்கின்றனர். இதைப் புலிகள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்குரியதும் ஆகும். காஷ்மீர், சிந்து போன்ற இடங்களில் சிறுபான்மை இந்துக்கள் முழுமைகாக அழிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தங்கள். இந்த இந்துக்களைப் பாதுகாப்பதற்கு அரசு இருந்தும் முடியவில்லை என்பது கண்கூடு. இத்துடன் ஒப்பிடும் போது கட்டுப்பாடு முழுவதும் புலிகளின் கையில் இருந்தபோதும் அன்று யாழில் முழு இஸ்லாமியரையும் அழிப்பது புலிகளுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. இருப்பினும் பாதுகாப்புக்கருதி அவர்களை வெளியேற்றினார்கள் என்பதே உண்மை.
GetAttachment (2)
சோனகர்கள் எதுவுமே செய்யவில்லை புலிகள் யாழ்பாணத்தை விட்டுக் கலைத்தார்கள் என்று நீலிக்கண்ணிர் வடிப்பது உண்மையை மறைத்து புலிகளின் மேலுள்ள காழ்புணர்வுகளை கொணர்வதாகவே அமைகிறது. குற்றவாளிகளை சிறைப்பிடித்து அவர்களின் இடத்தில் இருந்து அகற்றி அல்லது அப்புறப்படுத்தி வைப்பது அவர்களை அழிப்பதற்காகவோ சுத்திகரிப்பதற்காகவோ அல்ல என்பதை அறிவதே அறிவு. இந்த இடம்பெயர்வும் இடமாற்றமும் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதற்கே புலிகள் செய்த செயலாகும். இன்று அவர்கள் பாதுகாக்கப் பட்டார்களா இல்லையா என்பதை நீங்களே காணலாம்.

இன்று எழுந்திருக்கும் யாழ்பாண முஸ்லீம்கள் பற்றிய சர்ச்சையானது வெறுமனே புலிகளின் மேல் த.தே.மு மேல் தனிப்பட்ட அரசியில்வாதிகளின் மேல் உள்ள காழ்புணர்வுகளைக் கக்குவதாகவே அமைகிறது. புலிகள் இனச்சுத்திகரிப்பைச் செய்திருக்க விரும்பினால் அவர்களுக்கு 24மணித்தியாலம் தேவையில்லை என்பதையும் அறிக. அவர்கள் அதைச் செய்யவில்லை. இந்த இஸ்லாமியர்களின் செய்தியை மக்களிடையே பரப்பி மக்களை கிளர்ந்தௌப்பண்ணி இஸ்லாமியர்களை தாங்கள் அழிக்காது அவர்களை அங்கேயே வைத்தும் அழித்திருக்கலாம் இதையும் புலிகள் செய்யவில்லை. ஆக யாழ்முஸ்லீம்களை புலிகள் பாதுகாப்பதற்காக யாழ்பாணத்தை விட்டு அகற்றினார்கள் என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மையாகவும், இன்றைய முடிந்த முடிவுமாக உள்ளது. இப்படி அகற்றப்படாமல் இருந்திருந்தால் பொம்மை வெளியல் முஸ்லீம்களின் காட்டிக்கொடுப்பால் நடந்த விமானக்குண்டுவீச்சுக்களால் மக்கள் கிளர்ந்தெழுந்து எத்தனை முஸ்லீம்களைக் கொன்று தள்ளியிருப்பார்கள். இதை யாராவது சிந்தித்துப் பார்த்தீர்களா? இன்று யாழ்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொரு இஸ்லாமியனும் புலிகளுக்கு நன்றியுடையவர்களாகவே இருந்தல் அவசியம்.

ஒரு கந்தசஷ்டிக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து அதே கந்தசஷ்டி அன்று யாழ்தமிழர்கள் புலிகளிகளால் பலாலியில் இருந்த இராணுவம் வெளியேறுகிறது என்று அழைத்துச் சென்று வதைக்கப்பட்டார்கள். இதை ஏன் இனவழிப்பு என்று கூற மறுக்கிறீர்கள். யாழ்முஸ்லீம்களை வெளியேற்றியது இனவழிப்பு என்றால் தமிழ்மக்கள் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதும் இனவழிப்புத்தானே. இதை பொய்காரணங்கள் காட்டி மறுப்பாது மறைக்காது இருப்பது அவசியம்.

யாழ்பாணத்தில் இருந்து வெளியேறிய சோனகர்கள் யாழ்பாணத்தில் இருந்து போய் வரும் லொறிகளை மறித்துக் கம்பம் கேட்டும் பணம் பறித்தும் சாரியினரைத் துன்புறுத்தியும் வந்தார்கள். பலமுறை பொறுத்த புலிகளிகள் சிறுநடவடிக்கை ஊடாகி அதை அடக்கினார்கள். ஆனால் அதே புலிகள் அழைத்துச் சென்ற தமிழர்களை என்ன செய்தார்கள்? எப்படி கஸ்டத்துக்கு உள்ளாக்கினார்கள் என்பதை யாவரும் அறிவர். இனிச் சொல்லுங்கள் புலிகள் சோகருக்குச் செய்தது நன்மையா? தீமையா? இன்று அத்தனை சோனகர்கள் உயிருடன் உள்ளனரே. இவர்களும் முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தால் நிலை என்ன? ஆக புலிகள் சோனகர்களுக்கு நன்மையே செய்தார்கள் என்பதுதான் உண்மையும் முடிவுமாகும். முழுமையாக புலிகளுக்கு சோனகர்கள் காலம் பூராகவும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டியவர்களே. அத்துடன் சோனகர்களை மதரீதியாக ஒரு இனமாக மாற்றிய பெருமையும் புலிகளுக்கே உண்டு. தம்மை மதரீதியாக அடையாளம் காண முடியாமல் இருந்த முஸ்லீம்களை ஒரு மதத்தை இனமாக்கிய பெருமையும் புலிகளுக்குத் தான் உண்டு.

உலகில் நடந்த இஸ்லாமியர்களின் வரலாறுகளும், நடக்கும் நிகழ்வுகளும், தமிழர் சிங்களவர்களாகிய எமக்கு சிலபாடங்களைக் கற்பிக்கின்றன. அவற்றை அறிதலும் அதனூடாக எம்மக்களையும் மனிதத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முஸ்லீம் அல்லாத ஒவ்வோருவருக்கும் உண்டு. இலெபனான் என்ற முழுக்கிறிஸ்தவநாடு எவ்வாறு இஸ்லாமிய மயமாக்கப்பட்டது இன்று என்னவானது. நடந்தது என்ன? இன்று அதன் நிலை எதிர்காலம் என்ன என்பதை அனைவரும்; அதாவது தமிழ் சிங்கள ஐரோப்பிய மக்கள் உணர்வது அவசியம். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி என்பதையும் கருத்தில் கொள்க. இதற்கான காளொளி ஒன்றையும் இங்கே தருகிறேன். https://www.youtube.com/watch?v=xMRR7B5q70A

images (37)

மதரீதியாக தம்மை அடையாயப்படுத்திக் கொள்ளும் மக்கள் வெறும் யதார்த்தமற்ற நம்பிகையையே அடிப்படையாகக் கொள்கிறார்கள். இராக்கில் வாழும் முஸ்லீம் தன்னை இராக்கியன் என்றே சொல்கிறான், அடையாளப்படுத்துகிறான். இதே போல்தான் குறுடிஸ் இனத்துவர்கள் தமக்கு தனி நாடு இல்லை என்றாலும் மொழிசார்த்தே குருடிஸ் என்கிறான், ஈரான், பாக்கிஸ்தான் ஏன் அராப் என்ற மொழியினதும், இஸ்லாத்தின் ஆணிவேரான சவுதி முஸ்லீம் கூட தன்னை சவுதி அரேபியன் என்றே அழைப்பான். ஆனால் இலங்கை முஸ்லீங்கள் மட்டும் இனம் வெறுத்து தம்மை முஸ்லீம் என்று மட்டம் அடையாளப்படுத்திக் கொள்கிறான். இது மிக மிக ஆபத்தானதும் அபாயகரமானதுமே ஆகும். இது இஸ்லாமியர் அதாவது சோனகர்களுக்கு மட்டுமல்ல அண்டியிருக்கும் இனத்துக்கும் ஆபத்தானது. இதன் விளைவுகளை இலங்கை மிகவிரைவில் சந்திக்க நேரலாம்.

யாழ்மண் தமக்குரியது என்று இன்று உரிமை கொண்டாட முயலும் முஸ்லீங்கள் எதற்காக அந்த மண்ணைவிட்டுப் போனீர்கள். அந்தமண்ணுக்காக உயிரையும் கொடுத்து புலிகளுக்கு எதிராக நின்றிருக்கலாமே. அன்று இல்லாதுபோன மண்பற்றி இப்போ எப்படி மனதில் உதித்தது குதித்தது? அந்தமண்ணை நீங்கள் நேசிக்கவில்லை என்பது முழுமையான தெளிவு. இதே கேள்வியை தமிழர்களுக்கு எதிராகவும் நீங்கள் கேட்க முயற்சிக்கலாம். இராணுவம் தமிழர்களின் முழு எதிரியாகவே இருந்தது. புலிகளை நம்பியவர்களைத் தவிர மற்றவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு நகரவே இல்லை. செத்தாலும் தன்வீட்டில் தன் நிலத்தில் சாகிறோம் என்றே நின்றார்கள். அங்கே மண்நேசிப்பு என்பது உயர்ந்துதான் நின்றிருக்கிறது. மீனுக்கு வாலையும் பாம்புக்குத் தலையையும் காட்டும் நேர்மையற்ற அரசியலும், இனவடையாள வலியுறுத்தலும், நிலநேசிப்பையும் கொள்ளும் சோனக மக்கள் தாங்கள் யார் தமது நிலைப்பாடு என்ன என்பதை சரியாக வரையறுப்பது தெளிவாக மக்கள் முன்வைப்பது அவசியம். புலிகள் அவர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பாக யாழ்பாணத்தை விட்டு அகற்றியதை காரணங்காட்டிக் கழிவிரக்கம் தேடி வாழ முயற்சிப்பது போலித்தனமான போக்கிரித்தனமான இன மத கோட்பாடுகளைக் காட்டி நிற்கிறது.

இலங்கைச் சோனகர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதை அவர்களே மறக்கமாட்டார்கள். அவ்வளவு மொழி நேசிப்புடையவர்கள் புலிகளின் செயற்பாடுகளால் மதவடையாளத்தைத் தூக்கிக் கொள்வது சரியானதா என்பதையும் அவர்கள் யோசிக்க வேண்டும். இப்படியான நேசிப்பிருந்தவர்கள் 24 மணித்தியலத்தில் இனவடையளத்தையே மாற்றியவர்கள் நாளை எதற்காகவும் எதையும் மாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களைப் போல் மதவடையாளத்தைத் தமிழர்களும் தூக்கினால் இந்துக்கள் பௌத்தர்களுடன் இணைவதை யாராலும் தடுக்கவும் முடியாது. அது இந்து பௌத்த ஒற்றுமைக்கும் இலங்கையின் ஒன்றுமைக்கும் வழிவகுக்கும் என்பது உண்மையாகும். இதுவே இன்றைய இலங்கைக்கும் சுபீட்சமான தமிழ் சிங்கள எதிர்காலத்துக்கும் வழிவகுக்கும். இதை முறிக்கும் செயல்களே இஸ்லாமியர்களால் கிழக்கில் உடைக்கப்படும் இந்து ஆலயங்கள் என்பதை தமிழ் சிங்கள மக்கள் அறிவது அவசியம்.

புதிய கருத்துக்களுடன்
நோர்வே நக்கீரா

About The Author

Related posts