Wednesday, November 22, 2017

.
Breaking News

ஒன்பது மாதங்களில் 21 பேர் எயிட்ஸ் நோயால் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் செப்டம்பர் மாத இறுதி வரை ஆயிரத்து 405 ஆண்களுக்கும், 836 பெண்களுக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி நிரலின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 405 ஆண்களுக்கும் 182 பெண்களுக்கும் எயிட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாது காலாண்டு வரையான தரவுகளின் அடிப்படையில் இரண்டாயிரத்து 241 பேருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 587 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு மாத்திரம் புதிதாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 39 பேர் எயிட்ஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு 229 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 50 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 21 பேர் எயிட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளதோடு, கடந்த வருடம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை எயிட்ஸ் நோயால் 357 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த வருடம் மாத்திரம் எட்டு இலட்சத்து 99 ஆயிரத்து 277 பேருக்கு எச்.ஐ.வி தொற்று தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About The Author

Related posts