Wednesday, February 21, 2018

.
Breaking News

மாலைதீவு ஜனாதிபதி மீதான படுகொலை சந்தேக நபர் ஸ்ரீலங்காவில் கைது!

மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் மீதான கொலை முயற்சியின் சந்தேக நபரொருவர் கொழும்பு – தெஹிவளை நெதிமாலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் மற்றும் அவரது பாரியார் சவுதியில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிவிட்டு நாடு திரும்பும் வழியில், அவர்கள் பயணித்த கப்பலில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் மாலைதீவு ஜனாதிபதியின் பாரியார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts