Tuesday, February 20, 2018

.
Breaking News

சன்னி லியோனையே முந்தி விட்டார் ப்ரியா வாரியார்

சன்னி லியோனையே முந்தி விட்டார் ப்ரியா வாரியார்

சன்னி லியோனின் சாதனைகளை முறியடித்து இணையத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார் ப்ரியா வாரியார்.

சமீபகாலமாகவே கேரளத்துப் பெண்கள், இளைஞர்களை அதிகமாக மையல் கொள்ள செய்கின்றனர். ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி இளைஞர்களை வசீகரம் செய்தார். பிறகு, ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் வந்து சாய் பல்லவியை சைடு வாங்கினார். இவர்கள் அத்தனை போரையும் இப்போது பின்னுக்கு தள்ளியிருக்கிறார் ‘ஒரு அடார் லவ்’ மலையாளப் பட நாயகியான ப்ரியா வாரியர். இன்னும் சொல்லப்போனால், கவர்ச்சிப் புயல் சன்னி லியோனையே சைடு வாங்கியிருக்கிறார் இந்தப் ப்ரியா வாரியர்!

மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்’, `சங்ஃஸ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த  9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. ‘மாணிக்ய மலராய பூவி’ என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்.

ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி காதல் பார்வை பார்க்கும் ப்ரியா வாரியர் தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி உள்ளார்.

இந்த வீடியோவுக்குப் பிறகு, ப்ரியா வாரியருக்கென தற்போது மிகப்பெரிய ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது. மூன்றே நாட்களில் இந்த வீடியோவை யூடியூப்பில் சுமார் 48 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். யூடியூப் டிரெண்டிங்கில் இந்தப்  பாடல் முதலிடத்தில் உள்ளது. அந்தக் காட்சியில் வரும் ப்ரியா வாரியரை 3 நாட்களில் கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் பின்பற்ற ஆரம்பத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரினா கைப், அலியாபட் போன்றவர்களுக்குத் தான் அதிக அளவில் ஃபாலோயர்ஸ் இருந்தனர். சன்னி லியோன் வந்து அவர்கள் அத்தனை போரையும் அடித்து துவம்சம் செய்து முதலிடத்தை பிடித்தார். உலகம் முழுவதும் சன்னிலியோனுக்கு மிகப்பெரிய ரசிகர் படைஉள்ளது. கூகுள் சர்ச் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நபராக சன்னி லியோன் இருந்து வருகிறார். ஆனால், சன்னி லியோனையின் சாதனையை ப்ரியா வாரியர் முறியடித்துவிட்டார். இன்னும், ஒரு சில நாட்களில் புதிய உச்சத்தை ப்ரியா பெறுவார் என்று ரசிகர்கள் சொல்கின்றனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *