Tuesday, February 20, 2018

.
Breaking News

காதலர்கள் தானே; இப்போவே தாலி கட்டுங்கள்: இந்து முன்னணி

காதலர்கள் தானே; இப்போவே தாலி கட்டுங்கள்: இந்து முன்னணி

காதலர் தினத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், திருச்சியில் இந்து முன்னணி அமைப்பினர், காதலர்களை தாலி கட்ட வைக்கும் வினோத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் சிலர், தாலியுடன் நின்றனர். காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பின்னர், திருமணம் செய்துவைக்க ஜோடிகளை தேடினார்கள். ஆனால், அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காதல் ஜோடிகள் யாருமே அங்கு இல்லாததால், கோஷங்கள் மட்டும் எழுப்பி அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *