Tuesday, February 20, 2018

.
Breaking News

தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணமான பயங்கர தீவிரவாதி கைது

தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணமான பயங்கர தீவிரவாதி கைது

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். 4 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இவனால் இதுவரை 165 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

ஆரிஸ் கான் என்ற அந்த தீவிரவாதி, பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவன் என்றும், வெடிகுண்டுகள் செய்வதில் அவன் வல்லுநர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான அவன், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் நிலையில், அவனை பற்றிய விவரங்கள் கொடுப்பவர்களுக்கு 15 லட்ச ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

2007-08 ஆண்டுகளில் உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இவன் காரணமாக கருதப்படுகிறது. இந்த சம்பவங்களில் மொத்தம் 165 பேர் பலியானார்கள், 535 பேர் காயமடைந்தனர்.

நேற்று மாலை இந்திய நேபால் எல்லையில் அவன் கைது செய்யப்பட்டான். 2008க்கு பிறகு, நேபாலில் சென்று தலைமறைவான கான், அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியராகவும், ஓட்டலிலும் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *