Tuesday, February 20, 2018

.
Breaking News

நம் உயிர்கள் பிரிந்திருக்கும்!…. சங்கர சுப்பிரமணியன்.

நம் உயிர்கள் பிரிந்திருக்கும்!…. சங்கர சுப்பிரமணியன்.

விடைசொல்ல உன் இதழ்கள் மறுத்தபோதும்

விழியோரம் திரண்டிருக்கும் விழிநீர் விடைதனை சொல்லிற்று
முகமதில் கவ்விநிற்கும் சோகம் அதை முழுமையாயும் சொல்லிற்று
ஈராண்டுக்கு மேலாய் நாம் பழகி வந்தாலும்
என் இருகரங்கள் உன்னுடலை தீண்டியதில்லை
உன்மனதோடு எனமனது மட்டும் தொட்டு விளையாட
என்விழியொடு உன்விழிகளும் ஓடிப்பிடித்தும் விளையாட
நாம் விடும் மூச்சுக்காற்று மட்டும் ஒன்றாய்ச் சேர்ந்து  உறவாடின
இன்று மட்டும்  என்கையைப்  பிடித்து உன்மடி மேல்வைத்தாய்
மடிமீதிருந்த என்கைமேல் உன் கையைப்பிடித்து நானும் வைத்தேன்
மனதில் பதிந்து வேர்விட்டிருந்த நம் காதலை வேரோடு பிடுங்கினாய்
பிடுங்கப்பட்டதால் ஏற்பட்ட வலி கண்ணீர் முத்துக்களாய் விழ
பிடுங்கியதால் உனக்கும் ஏற்பட்டவலி
உனது கண்ணீர்த்துளிகளும்
மணிகளாய் சிதறிவிழ
விழுந்த கண்ணீர்த்துளிகள் ஒன்றாய் இணைந்து
நம் கைகளை நனைத்து ஓடின
ஓடிய கண்ணீர்துளிகள் நம்காதலையும்
சுத்தமாகக் கழுவிச்சென்றன
எங்கிருந்தாலும் வாழ்கவென நீயும்
நானும்
வாழ்த்தி விலகிச்  செல்லாதிருந்தால்
இங்கே நம் காதலொன்றும் மலர்ந்து கனிந்திருக்காது
மாறாய் ஆணவக் கொலைநடந்து
நம் உயிர்கள் பிரிந்திருக்கும்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *