Tuesday, February 20, 2018

.
Breaking News

ஆட்சியமைப்பது குறித்து யாரும் பேசவில்லை! – சம்பந்தன்

ஆட்சியமைப்பது குறித்து யாரும் பேசவில்லை! – சம்பந்தன்

புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, எந்தவொரு கட்சிகளும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில், வினவியதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அது சம்பந்தமாக பேசுவதற்குரிய எவ்வித தேவையும் எமது கட்சிக்கு இல்லை. தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். எந்தவொரு கட்சியினதும் பிரதிநிதிகளும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் அது குறித்த தீர்மானம் எடுக்கும் தேவையொன்று எழவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *