Tuesday, February 20, 2018

.
Breaking News

சுட்டு பிடிக்க திட்டம் போலீசாரிடம் சரண் அடைந்த ரவுடி பினு!

சுட்டு பிடிக்க திட்டம் போலீசாரிடம் சரண் அடைந்த ரவுடி பினு!
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு தனது கூட்டாளி பரிவாரங்களோடு மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் பெரியஅளவில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியபோது, ஒரேநேரத்தில் 75 பயங்கர ரவுடிகளை பட்டாகத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். பல்லு மதன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்தான் வடக்கு மலையம்பாக்கத்தில் 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர்.
சென்னையில் ஒரே இடத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. சென்னையில் வாழும் பெரும்பாலான ரவுடிகள் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
ரவுடி பினு கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கவுரவமான குடும்பம். அவரது முதல் மனைவி இறந்துபோனார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை காதலித்து பினு திருமணம் செய்துள்ளார். கராத்தே வீரரான பினு முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் ஆதரவோடு ரவுடியாக மாறிவிட்டதாக கூறப்பட்டது.
ரவுடி பினுவை போலீசார் சுட்டு பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.இந்த நிலையில் இன்று திடீரென பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசாரின் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே பினு போலீசில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் வலம் வரும் மற்றொரு ரவுடியான அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனை பிறந்த நாளுக்கு வரவழைத்து போட்டுத் தள்ள பினு திட்டமிட்டிருந்தார். ஆனால் ராதாகிருஷ்ணன், பினு பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்லாமல் தப்பிவிட்டார்.
தற்போது போலீசிடம் சரணடைந்துள்ள பினுவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பினு இதுவரை செய்த கொலைகள், அவருக்கு ஆதரவாக இருக்கும் பிரமுகர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *