Tuesday, February 20, 2018

.
Breaking News

பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்: நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நேற்று ஜம்மு காஷ்மீரின் சஞ்வானில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் 3 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அங்கு புகுந்த 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி வழி காட்டி அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, இன்று பேசிய  பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றார். இந்த தாக்குதலுக்கு அந்த பகுதியில் உள்ள சிலர் உதவியிருக்கலாம் என்றும், ஜெய்ஷ் ஈ முஹம்மது அமைப்பினரின் உதவியுடன் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் ஜெயிஷ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான ஆதரங்களை பாகிஸ்தான் அரசிடம் கொடுக்க உள்ளதாகவும் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இதுபோன்ற ஆதாரங்களை அனுப்பி வருவதாவும் அவர் தெரிவித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *