Tuesday, February 20, 2018

.
Breaking News

கிரிமினல் வழக்குகள் கொண்ட 11 முதலமைச்சர்கள் மீது வழக்கு

கிரிமினல் வழக்குகள் கொண்ட  11 முதலமைச்சர்கள்  மீது வழக்கு

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்களாக பதவி  வகிப்பவர்களில் 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜனநாயக சீரமைப்புக்கான ADR என்றார் அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் முதலமைச்சர்கள் பற்றிய குற்றப் பின்னணியும், சொத்து மதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 31 முதலமைச்சர்களில் 25 பேர் கோடீஸ்வரர்கள் என தேர்தல் பிரமாணத்தில் தெரிவிக்கப்பட்ட அவர்களது சொத்து மதிப்பில் உள்ளது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாத்வனிஸ், ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங், கேரளா முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இவர்களில் 8 பேர் மீதுள்ள வழக்குகளில், கொலை, கொலை மிரட்டல், மோசடி என்பது போன்ற பல்வேறு மோசமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

கோடீஸ்வரர்களாக உள்ள 25 முதல்வர்கள் பட்டியலில், சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், ரூ.129 கோடி சொத்துக்களுடன் அருணாச்சல் முதல்வர் பேம கந்து இரண்டாவது இடத்திலும், ரூ.48 கோடி சொத்துக்களுடன் அம்ரிந்தர் சிங் 3வது இடத்திலும் உள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.7.8 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *