Tuesday, February 20, 2018

.
Breaking News

லெட்டரில் வந்த பவுடரால் விபரீதம்: டிரம்ப் மருமகள் உடல்நலம் பாதிப்பு!

லெட்டரில் வந்த பவுடரால் விபரீதம்: டிரம்ப் மருமகள் உடல்நலம் பாதிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர். இவரது மனைவி வெனிஷா. மன்ஹட்டான் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இவருக்கு தபால் ஒன்று வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது திடீரென்று, இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அவரது தாய் மற்ற்ம் வீட்டு வேலையாள் என்று அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் ஜூனியர் என்ற பெயரில் வந்த கவரில் வெள்ளை நிற பவுடர் இருந்ததாகவும், அதனை சுவாசிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நியூயார்க் போலீஸ் மற்றும் சீக்ரெட் உளவுத்துறை இணைந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *