Saturday, February 24, 2018

.
Breaking News

மைத்திரிக்கு காலக்கெடு வைத்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்!

மைத்திரிக்கு காலக்கெடு வைத்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்!

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஸ்ரீ.

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை வசப்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணியினர், மஹிந்த ராஜபக்சவை பிரதரமாக்கும் முயற்சியில் களமிறங்கவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய 45 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 222 க்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சுதந்திரக் கட்சி அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் அவசரமாக அழைத்து கலந்துரையாடலை நடத்தினார். கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதோடு சிறந்த முடிவொன்றை எடுப்பதற்கு சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன “நாட்டிலுள்ள நிலவரம் தொடர்பாக நாங்கள் இன்று கலந்துரையாடினோம். எமக்கு கருத்து கூறுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் அளித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே மக்கள் இம்முறை வாக்களித்திருப்பதாக நாங்கள் எடுத்துக்கூறினோம். இதன்படி விரைவான மாற்றமொன்றை நாட்டில் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

எவ்வகையான மாற்றம் என எங்களால் கூறமுடியாது. நாங்கள் ஒரு கால எல்லையை வழங்கினோம். இதன்படி குறித்த காலப்பகுதிக்குள் ஆட்சிமுறையில் மாற்றமொன்றை ஜனாதிபதி ஏற்படுத்துவார். இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் பயணத்தை முன்கொண்டு செல்லுமா என்பது குறித்து யோசனை செய்வதற்கு ஜனாதிபதிக்கு காலம் வழங்கினோம்” என்றார்.

இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் மக்கள் எதிர்பார்க்கும் ஒருமுடிவை ஜனாதிபதி எடுப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *