Tuesday, February 20, 2018

.
Breaking News

ஆஸ்திரேலிய முகாமிலிருந்து அமெரிக்கா கிளம்பிய அகதிகள்

ஆஸ்திரேலிய முகாமிலிருந்து அமெரிக்கா கிளம்பிய அகதிகள்

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நவரு தடுப்பு முகாமிலிருந்த 22 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் இன்று நவுருவிலிருந்து பிஜி வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை சென்றடைய இருக்கின்றனர்.

இந்த அகதிகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என  Refugee Action Coalitionஅமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளர். இதில் ஒரு ரோஹிங்கியா குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படும் இந்த அகதிகளுக்கு முதல் 3 மாதம் அடிப்படை வசதிகள்அனைத்தும் வழங்கப்படுகின்றது. ஓராண்டுக்குப் பின் அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்குவதற்கான உரிமையைப் பெறுவார்கள். 5 ஆண்டுகள் நிறைவில் அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிய வருகின்றது.

கடந்த நவம்பர் 2016 யில் கையெழுத்தான ஆஸ்திரேலியாஅமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலிய தடுப்புமுகாமில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதுஅதே சமயம் மத்தியஅமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்த வழிவகைச் செய்யப்பட்டுள்ளதுஇன்றைய நிலையில் சுமார்2000 அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்இவர்கள் சொந்த நாட்டில் உள்ள போர் சூழல் காரணமாக படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்களாவர். 

இந்த அகதிகள் ஒப்பந்தத்தின்கீழ்இதுவரை மனுஸ் மற்றும் நவுரு தடுப்பு முகாமிலிருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட அகதிகள்அமெரிக்கா மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *