Saturday, February 24, 2018

.
Breaking News

சென்சார் கத்திரிக்கு தப்பிய ‘எக்ஸ் வீடியோஸ்’

சென்சார் கத்திரிக்கு தப்பிய ‘எக்ஸ் வீடியோஸ்’

ஆபாசப் பட தளத்தின் பெயரில் டைட்டில், கிளாமர் காட்சிகள் உள்ள ‘எக்ஸ் வீடியோஸ்’என்கிற படம் சென்சார் கத்தரிக்கு தப்பியுள்ளது.

ஒரு திரைப்படம், சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டும் போது  சில வெட்டுக்களையும், பல ‘மியூட்’களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.

சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை, எளிதாக சான்றிதழ் கிடைத்துவிடும்.

சமூகப்பிரச்னைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. சமீபத்தில் அப்படி திணறி வர முடியாமல் போன படம் ‘எக்ஸ் சோன்’என்ற இந்திப் படம்.  மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை  வெளி வர முடியாமலே போய்விட்டது.

ஆனால் இப்போது, ‘எக்ஸ் வீடியோஸ்’என்ற படத்திற்கு ‘ஏ’சான்றிதழும், சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது திரையுலகில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எக்ஸ் வீடியோஸ்’ படம் தமிழ், இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரி உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இது குறித்து இயக்குநர்  சஜோ சுந்தர் கூறுகையில்,“படத்தின் தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம். ஆனால், குறிப்பாக சொல்லப்போனால் அந்த தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் இது.

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு பெண் உறுப்பினர்ககள்,‘அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது’என்று பாராட்டினார்கள்.  தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்” என்றார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *