Tuesday, February 20, 2018

.
Breaking News

பிணமென்று ஆவேன் சகியே..! வித்யாசாகர்.

பிணமென்று ஆவேன் சகியே..!  வித்யாசாகர்.
னக்கான மழைத்துளிகள் தான்
இந்த வனமெங்கும் பெய்கிறது,

உன் மௌனத்தில் கரைந்தொழுகும்
கண்ணீராகவும்

உனது சிரிப்பில்
பூச்சொரிக்கும் மலர்களாகவும்

நீ பேசுகையில்
இசையும் நரம்புகளின் உணர்வாகவும்

உனைப் பார்த்துக்கொண்டே யிருக்கையில்
உயிர்த்திருக்கும் நினைவுடனும்

உனைக் காணாத பொழுதுதனில்
சலனமற்றிருக்கும் நதியின் முகந்திரமாகவும்

நீ மட்டுமே எனக்கான
மழைத்துளிகளாய்
இவ்வனமெங்கும் பொழிகிறாய்!

இந்த வனத்திற்கு நீயிருக்கையில்
நானென்று பெயர்,
நீயில்லா கணமொன்றில்
பிணமென்றும் பெயராகலாம்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *