Tuesday, February 20, 2018

.
Breaking News

மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்!

இலங்கையில் வீரகேசரி பத்திரிகையிலும் தகவல் திணைக்களத்திலும் ரூபவாஹினி தமிழ்ச்சேவையிலும் முன்னர் பணியாற்றிய செல்வி கமலா தம்பிராஜா நேற்று முன்தினம் (7 ஆம் திகதி) காலை கனடாவில் டொரொன்டோவில் காலமானார்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், வீரகேசரியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர். பின்னர் தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.

இலங்கையில் முதல் முதலில் ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கு தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் சிறுவர் நிகழ்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.

இலங்கை தகவல் அமைச்சு, ஈரானிய உயர்ஸ்தானிகராலயம் முதலியவற்றிலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர்.

1980 களின் பிற்பகுதியில் கனடாவுக்குக் குடிபெயர்ந்த கமலா தம்பிராஜா, 1991ஆம் ஆண்டு டொரன்டோவில் ஆரம்பிக்கப்பட்ட தேமதுரம் வானொலியில் பிரதான அறிவிப்பாளராகவும் 2001ஆம் ஆண்டு அங்கு ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர். கனடாவில் தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலிய வானொலிகளிலும் செய்திகளைத் தொகுத்து வழங்கியவர்.

இலங்கையில் 1976 இல் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி என்ற திரைப்படத்திலும் பொன்மணியின் அக்காவாக தோன்றி நடித்திருக்கிறார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *