Tuesday, February 20, 2018

.
Breaking News

முற்றுப்பெறாத கவிதைகள் நூல் வெளியீட்டு விழா!

முற்றுப்பெறாத கவிதைகள் நூல் வெளியீட்டு விழா!
மட்டக்களப்பில் மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் மகுடம் கவிஞர் வி.மைக்கல்கொலின் ஏற்பாட்டில் கவிதாயினி நிலாந்தி சசிகுமாரின் முற்றுப்பெறாத கவிதைகள் நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
தேனகக் கலைச்சுடர் கவிஞர் கதிர்பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சர் செயலக சிரேஸ்ட உதவிச்செயலாளர் எழுத்தாளர் வெ.தவராஜா(ராசாத்தி) கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி கீர்த்திகா மதனழகன் கலந்து கொண்டார். நூலின் முதற் பிரதியினை வர்த்தகர் பா.செல்வராஜா பெற்றுக் கொண்டார். நூல் அறிமுகத்தினை கவிஞர் ச.மணிசேகரன் நிகழ்த்தினார்.
படைப்பாளிகள் தமது நூல்களின்  தொகுப்புக்களை போடவேண்டும். தமது தொகுப்புக்களை போடாவிட்டால் படைப்பாளிகள் காணாமல் போய்விடுவார்கள். படைப்பாளிகளை அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவதும்  அவர்களால் வெளியிடப்படுகின்ற நூல்களின் கனதியைப் பொறுத்தே அமைகின்றது. எம் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் எழுத்தாளர்களே இருக்கின்றனர்.
மட்டக்களப்பை பொறுத்தவரை மண்டூர் அசோகா, வாசுகிகுணரெட்ணம், ருத்திரா, சுந்தரமதி என ஒரு சிலரே உள்ளனர். இவர்களுள் இன்று முற்றுப்பொறாத கவிதைகள் நூலினை வெளியிடும் கவிதாயினி நிலாந்தி சசிக்குமாரும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கின்றார்.
பாடசாலைக் காலத்தில் பல்கலைக்கழகங்களில் தமது  படைப்பிலக்கியத்தில் ஆர்வம் காட்டும் பெண்கள் திருமணமானதும் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திக் கொள்கின்றனர். இது ஒரு ஆரோக்கியமற்ற நிலையாகும். அந்த வகையில் குடும்ப பொறுப்புக்களுக்கு மத்தியிலும் தனது கவிதை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு இன்று நூல் ஒன்றினை வெளியிடுவதற்கு முன் வந்துள்ள நிலாந்தியை பாராட்டியாக வேண்டும். 
நல்ல பல தொகுப்புக்களை தேடி கற்பதன் மூலம் மிகவும் சிறந்த படைப்புக்களை உருவாக்க முடியும். வாசிப்பும் தேடலும் இருப்பவர்களே சிறந்த படைப்பாளிகளாகவும் மிளிர முடியும். ஒருவர் நூல் ஒன்றினை வெளியிடும் தருணத்தில் அந் நூலினைப்பற்றிய விமர்சன உரையினை ஆற்றி அவரை முளையிலே கிள்ளி எறிகின்ற செயற்பாட்டையே பலர் செய்கின்றனர். இந் நிலையை நாம் மாற்றியுள்ளோம். முதல் தொகுப்பினை வெளியிடுகின்றவர்களுக்கு நூல் அறிமுகத்தை மாத்திரமே செய்துவருகின்றோம். ஆயிரம் படைப்புக்கள் வெளிவரவேண்டும். அப்போது தான் மறைந்து கிடக்கும் படைப்பாளிகள் பலர் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்றார்.
 செ.துஜியந்தன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *