Tuesday, February 20, 2018

.
Breaking News

பெஞ்சனியர் பொன்னம்பலம் பேருவளை போனார்!… கமலேஷ்.

பெஞ்சனியர் பொன்னம்பலம் பேருவளை போனார்!… கமலேஷ்.

பெஞ்சனியர் பொன்னம்பலம் பேருவளை போனார் – பேஸ்புக் ப்ரண்ட்
ரஞ்சினியை கண்டதுமே ராட்டினமாய் சுழன்றார்
அஞ்சு மணி ஆனதுமே பொன்னர்
ஆசை தீர்க்க வேண்டும் என்றார்
பஞ்சு மெத்தை மீதினிலே நித்தியானந்தமாய் ரஞ்சினியுடன்
பம்பரமாய் சுழன்றார்

வஞ்சியவள் வனப்பை வர்ணிக்கி தமிழில்
வார்த்தையேது என்று குழைந்தார்
கொஞ்சி மகிழும் தம் அழகை கைப் பேசியில் பட(க்) கோர்வையாக்க வேண்டும் என்றார்
அஞ்சி அழுதாள் ரஞ்சி – என் அத்தான் உனக்கு இது
அடுக்குமா என்று சினங் கொண்டாள்
மஞ்சமதில் கொண்ட சுக மோகத்தால்
மங்கை மன மிசைந்தாள் – பொன்னர் உளம் மகிழ்ந்தார்

வண்ண வண்ண போட்டோ
வகை வகையாய் எடுத்தார் – தன்
எண்ணமதில் வாத்ஸ்சாயனரை உள் இருத்தி
ஏராளமான படம் எடுத்தார் – காமம்
கண்ணை மெல்ல மறக்க ரஞ்சினியோ
கவலையின்றி இடங் கொடுத்தாள்
பொன்னரின் போன் ஒரு நாள்
போன வழி தெரியா இடத்தில் தொலைந்திடுச்சு

உச்சியில சனி வந்து உட்காரும் என்று
உணர்ச்சிவசப்பட்ட வேளையில உணரவலை
பச்சை பச்சையாக ஊருலகம் பொன்னரை
படம் பார்த்ததால ஏச ஆரம்பிச்சது – உடல் முழுக்க
மச்சம் என நினைத்தவரின் நிலையோ ஆப்பிழுத்த
மந்தி கதையாய் ஆனது
அச்சம் கொண்டாள் ரஞ்சி – அவமானம் தாங்க வழியின்றி
மிச்சமுள்ள இந்த உயிர் எதற்கு என
முடி வெடுத்தாள் – முகம் சிதைத்தாள்!

#கமலேஷ்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *