Saturday, February 24, 2018

.
Breaking News

நிராகரிக்க வேண்டும்!… ஏலையா க.முருகதாசன்.

நிராகரிக்க வேண்டும்!… ஏலையா க.முருகதாசன்.
ஒரு கோமாளித்தனமான நடிகர் தான் ‘அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என கோமாளித்தனமான, கொஞ்சமும் ரோசமில்லாத இரசிகர்களிடத்தில்  சொல்லியிருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை.ரஜனிகாந்தான். இதில் என்ன வேடிக்கை என்றால் எட்டுக்கோடித் தமிழரை ஆள நினைப்பவன் தமிழனா என்பதைக்கூட ஆராய முற்பட எது தடுக்கிறது என்பதுதான் முக்கியம்.
தமிழினம் கீழ்வருவனற்றை எல்லாம் மேற்கோள் காட்டி தம்மை இழிச்சவாயர்களாக்கிக் கொள்கின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றது.
அவை இவைதான்’வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அல்லது தமிழன்’ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பவையே.
தமிழர்கள் நல்லவர்களாக பண்பாளர்களாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அவை பெருமைக்குரியவையாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் அந்தப் பெருமைக்குரியவை தமிழனின் தோளிலே தமிழரல்லாவர்கள் கால் வைத்து நடக்கும் பாதையாகவும் ஏறிச் செல்லும் ஏணியாகவும் மாறிவிடக்கூடாது.
நான் தமிழகத்திலேதான் பிறந்தேன் நான் ஒரு தமிழன் எனது நெற்றி வேர்வை தமிழக மண்ணுக்கு என்று சொல்லிச் சொல்லி முட்டாள் இரசிகர்களின் கையொலியில் வளர்ந்தவர்தான் இந்த ஒருமுறை சொன்னால் நூறுதரம் சொல்வதற்கு சமன் எனும் நடிப்பே சுத்தமாக வராத ரஜனிகாந்த்.
தமிழர்களை மகிழ்விப்பதற்காக சொல்லப்படும் சொற்கள் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கிறார் என்பதைத் தமிழகத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு ரஜனிகாந்த் என்ன செய்தார். கோடிக்கணக்காக பணம் வாங்கிக் கொண்டு நடித்து வரும் ரஜனிகாந்த் ஏதோ பொதுத் தொண்டு செய்தவர் போல இயற்கை வேளான்மை ஆழ்வார் போல தன்னை இனங்காட்டிக் கொள்ள முயற்சிப்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டம்.
தமிழகத்தில் வாழும் எட்டுக் கோடித் தமிழர்களில் பல இலட்சம் தமிழர்களான அறிவுஜீகளும், அரசியல் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாருமே இல்லை என்பது போல ரஜனிகாந்த் நினைத்துக் கொண்டிருப்பதற்கு வழிசமைத்தவர்கள் மண் சோறு சாப்பிட்டவர்களும் தலைவா என்று தூக்கிப் பிடிப்பவர்களுமே.
திரைப்படத்தில் கைதட்டல் வாங்கிவிட்டால் தமிழர்களை ஆளலாம் என்று நினைப்பது எவ்வளவு தவறு என்பதை ரஜனிகாதந்திற்கு தமிழர்கள் உணர்த்த வேண்டும்.
தமிழர்களைத் தமிழர்கள்தான் ஆளற வேண்டும் என்பதில் இரண்டாவது பதிலுக்கே இடமில்லை.
நட்பு என்பது வேறு ஆள நினைப்பவருக்கு ஆதரவளிப்பது என்பது வேறு. ஆன்மீகம் வேறு அரசியல் வேறு. அரசியல் என்பது அந்தந்த இனம் சார்ந்தது.
தமிழர்தான் ஆள வேண்டும் என்று தமிழர்கள் நினைப்பது இனவெறியல்ல. அது தமிழ் இன உணர்வு.இதில் தவறு ஏதுமே இல்லை.
தமிழகம் வந்தாரை வாழ வைக்கட்டும்.ஆனால் அவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்று கற்பனை செய்தும் பார்க்கக்கூடாது.
ஆந்திர மாநில மக்களைப்; போல, கேரளமாநில மக்களைப்; போல, கன்னட மக்களைப் போலத்தான் தமிழகத் தமிழர்களும் மாற வேண்டும்.
தமிழர்களின் தோள்கள் தமிழரல்லாதவர்களின் கால்கள் நடக்கும் பாதையல்ல.
ரஜனிகாந்த் அரசியலின் நுழைவாயிலேயே திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்.
இனித் தனது படங்கள் தோல்வியைத் தழுவும் இரசிகர்கள் புறந்தள்ளவார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட ரஜனிகாந்த் பொழுது போக்குவதற்காக அரசியலுக்கு வர நினைக்கிறார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *