Saturday, February 24, 2018

.
Breaking News

இலங்கையில் விவாகரத்துக்கான துரிதப்படுத்தல்?… ஏலையா க.முருகதாசன்.

இலங்கையில் விவாகரத்துக்கான துரிதப்படுத்தல்?… ஏலையா க.முருகதாசன்.
இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கடுமையான சட்டம் அமுலில் வரவிருக்கின்றது.இச்சட்டப்பிரிவுக்குள்,மனைவியைக்கூட  அவளின் விருப்பமின்றி கணவனாலேயே உறவு கொள்ள முடியாதவாறு இச்சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவிருக்கின்றது.பாலியல் வன்கொடுமை என்பது எவ்விதத்திலும் எற்றுக் கொள்ள முடியாததே.
பெண்மீதான வன்முறைத் தாக்குதலில் பாலியல் வன்கொடுமையே உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஒரு பெண்ணை வாழ்நாள் முழுவதும் அவளை நிம்மதியற்றவளாக்குவதாகும்.ஒரு பெண்ணைச் சுற்றி பல ஆண்கள் இருந்த நிலையிலும் அவள் தனது உடல் உள ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.அதற்கான சட்டமாகவும் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தை நோக்கலாம்ஆண்களில் வக்கிரபுத்தியும் காமவெறி கொண்டவர்களும் தனித்து இருக்கும் பெண்கள் மீதும்,வீதியில் தனித்துச் செல்லும் பெண்கள் மீதும் பாலியல் வன்கொடுமைகளைச் செய்கிறார்கள்.ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுக்கமையவும்,மக்களின் குணநலனுக்கு ஏற்பவும் பாலியல் வன்கொடுமைச் சட்டங்களைத் தயாரித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது, கொடுமைக்கு உட்படும் பெண்கள் வேதனையுடன் தமது வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டிய சூழ்நிலையைத் பண்பாட்டு ரீதியாகத் தோற்றுவித்துவிடும்.பெண்களை அவமானப்பபடுத்தும் நோக்கில்  ‘கற்பு’ என்ற ஒழுக்கநிலையைக் கற்பித்து அதன்மீதான தாக்குதலே பாலியல் வன்கொடுமை.கல்வியியலில,; சமூக முற்போக்குச் சிந்தனையில் என்னதான் இலங்கை முன்னேற்றம் கண்டாலும்  பாலியல் வன்கோடுமைக்கு உட்படும் பெண்களை ‘இன்னொரு பார்வை’ பார்க்காத சமூகமாக இன்னும் இலங்கைச் சமூகம் முற்றுமுழுதாகத் தெளிவு பெறவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் கணவன் மனைவிக்கு இடையில் நடைபெறும் உடல் உறவுகூட மனைவியின்  விருப்பத்துடனேயே இடம்பெற வேண்டும் என்ற சட்டம் உண்டு, கடுமையாக அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.
அது போன்ற சட்டத்தையே இலங்கை அரசும் கொண்டு வரவிருக்கின்றது.கணவன் மனைவிக்கு இடையில் ஒத்த மனநிலையும் மனைவிக்கு அந்நேரத்தில் உறவுக்கான விருப்பம் இருந்தால் மட்டுமே மனைவியுடன் உறவு கொள்ள முடியும்.கணவனுக்கு உறவு கொள்ள விருப்பமும் ஆசை இருந்த போதிலும் மனைவிக்கு அதற்குரிய மனிநிலையோ உடல்களைப்போ விருப்பமின்மையொ இருக்கும் நிலையில் மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகின்றது
இதில் பேசப்படாத பேசத் தயங்குகின்ற விடயமாகவிருப்பது திருமணம் செய்து கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ உடல்சார்ந்த வேறு தொடர்பு இருக்கும் பட்சத்தில் இச்சட்டம் பெண்களுக்கான சாதக நிலையைத் தோற்றுவிக்கலாம் என்ற பார்வையும் உண்டு.
தன்னுடைய கணவன் தன்னுடன் உறவு கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினார், தன்னை உடல்ரீதியாகத்  தாக்கிக் கட்டாயப்படுத்தி உடல் உறவு கொண்டார் என காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யவும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கவும் இச்சட்டம் வழிவகுக்கின்றது.
நீதிமன்றங்களில் விவாகரத்துக்கான வழக்குகளில் ஆய்வாளர்களின் ஆய்வின்படியம் அவதானிப்பிலும் பெரும்பாலான வழக்குகளில் மறைபொருளாக இருப்பது பாலியல்(செக்ஸ்)சம்பந்தப்பட்டதாக இருந்திடினும்  வழக்குத்  தொடுப்பதற்கான  காரணங்களாக வெறு காரணங்களே சொல்லப்படுகின்றன.’இன்னது’தான் விவாகரத்துக்கு காரணம் என வழக்காளிகளால் சொல்வதை இலங்கை மக்களின் பண்பாடே தடுத்து வருகின்றது.
கால்பட்டால் குற்றம் கைபட்டால் குற்றம் என்பது போல கணவன்மாரின் நிலை தோன்றுவதற்கு இச்சட்டம்  விவாகரத்துக்களை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இச்சட்டத்தை மனைவிமார் எமது உரிமை என்ற சட்டமாக கடுமையான போக்கில் கைகொள்வார்களானால் இலங்கை வாழ் கணவன்மார் சட்டத்திற்கு அமைய தம்மைத் தயார்படுத்தி கொள்வது தவிர்க்க முடியாததே.
விட்டுக் கொடுப்பும், ஏற்றுக் கொள்ளலும், சகிப்புத் தன்மையும் கணவன் மனைவிக்கு மிக முக்கியமானது.அதுவே குடும்பத்தைச் சொர்க்கமாக்கும்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *