Saturday, February 24, 2018

.
Breaking News

கிரகப்போர் 13…. காசியரின் பேரன்.

கிரகப்போர் 13…. காசியரின் பேரன்.

மாங்கதிர் கிரகத்தைச் சென்றடைந்த சாமியும் சுந்தரியும் அடுத்து எந்தக் கிரகத்துக்கு அழைத்துப் போகப் போகிறார்களோ தெரியாது என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.

பூமியிலிருந்து முதன்முதலாக மாங்கதிர் கிரகத்திற்கு வந்திறங்கிய போது 15,000 கிரகங்களுக்கு தலைமைக் கிரகமாக இருப்பது இந்த மாங்கதிர் கிரகமே என இக்கிரகத்தில் உள்ளவர்கள் அவர்களிருக்கும் சொல்லியிருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் பூமியில் உள்ள அடவாடித்தனங்களை சுட்டிக்காட்டுவதற்காக பூமியில் உள்ள மனிதர்களால் அனுப்பப்பட்ட சட்லைட்டுகளை செயலிழக்கச் செய்தமையும், கணிணியின் அச்சடிப்பு இயந்திரத்திலிருந்து வெற்றுத் தாள்களாக வரும் தாள்களை எந்தெந்த மொழிகளைப் பேசுகிறார்களோ அந்த மொழிக்காரர்கள் தாளை எடுக்கும் போது அந்த மொழியில் எழுத்துக்கள் தெரிந்ததும், அதில் மாங்கதிர் கிரகத்திலிருந்தே இந்தச் செய்திகள் அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மாங்கதிர் கிரகம் 100 கிரகங்களுக்கு தலைமை தாங்கும் கிரகம் என்று அச்செய்தியில் இருந்ததையும் அவர்களிருவரும் பூமியில் இருந்த போது, சாமி சுந்தரியிடம் வந்து சொன்னதை நினைவு படுத்திக் கொண்டனர்.

அங்கினக்கா, நண்டுங்கா கிரகங்களுக்கு மட்டுமே போய் வந்த இருவரும் அடுத்து தமது பணி என்னவாக இருக்கும் என யோசிக்கத்: தொடங்கினர்.

மாங்கதிர் கிரகம் பூமியைப் போலவே இருந்ததும், பூமியில் உள்ள மனிதர்கள் போலவும் அவர்கள் இருந்ததும் சாமிக்கும் சுந்தரிக்கும் பூமியில் இருப்பது போலவே தோன்றினாலும் பூமியிலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருப்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

100 கிரகங்களுக்கும் தம்மை அழைத்துச் செல்வார்களானால் பல வருடங்கள் செல்லுமோ என அவர்கள் வியப்படைந்தார்கள்.

ஆனால் அவர்கள் நினைத்தது போலல்லாது மாங்கதிர் கிரகவாசிகள் அவர்களை ஒவ்வொரு கிரகத்திற்கும் அழைத்தச் செல்வதென முடிவெடுத்திருந்தனர்.

நண்டுங்கா கிரகத்திலிருந்து புறப்பட்டு வரும்வழியில் பூமிக்கு மிக நெருங்கிய தூரத்தில் அதுவும் ஒரு மீற்றர் உயரத்தில் சாமி சந்தரியின் வீட்டுக்கருகில் அவர்களை ஏற்றி வந்த விமானம் நின்ற போதுகூட சாமிக்கும் சுந்தரிக்கும் பூமியில் உள்ள தமது வீட்டுக்கு போக வேணும் என்ற எண்ணம் ஏற்படவேயில்லை.

வேற்றக்கிரக வாசிகளின் நடவடிக்கையில் ஒன்றித்துப் பொன அவர்கள் இருவருக்கும் அவர்களுடயே போக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

இப்பொழுது அவர்கள் மாங்கதிர் கிரகத்தில் இருக்கிறார்கள்.பூமியைப் போன்று இருந்த அந்தக் கிரகத்தில் இரண்டொரு நாட்களாக அக்கிரகவாசிகள் பல இடங்களைச் சற்றிக் காண்பித்தார்கள்.

பூமியில் உள்ளது போலவே வீடுகள் கட்டிடங்கள் தெருக்கள் என்பன இருந்தன. ஆனால் அக்கிரகத்தில் பூமியில் பார்ப்பது போன்று சிறுவர்சிறுமிகளையோ, இளைஞர்கள் யுவதிகளையோ, வயதானவர்களையோ காணமுடியவில்லை. ஆண்களும் பெண்களுமாக எல்லோருமே 30 வயது மதிக்கக்கூடியவர்களாக இருந்தனர்.அழகானவர்களா இருந்தார்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தார்கள்.

பிறப்பு இறப்பு என்பது இந்தக் கிரகத்தில் இல்லை என்பது மட்டுமல்ல அங்கினக்கா கிரகத்திலும் பிறப்பு இறப்பு இல்லாதிருந்தது.

சாமியையும் சந்தரியையும் இன்னொரு கிரகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த மாங்கதிர் கிரக வாசிகள் அவர்களிடம்” உங்களிடம் ஒரு முக்கியமான விடயம் சொல்லப் போகிறோம், அது என்னவெனில் உங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைதான் பூமியை அழிக்கும் மாங்கதிர் கிரகவாசியாக வளர்வான் என்றதும் இருவருக்கும் மகிழ்ச்சி ஒருபுறமும் கவலை ஒரு புறமும் ஏற்பட்டது.

மகிழ்ச்சி எற்படுவதற்குக் காரணம் சாமிக்கு பூமியின் கால அளவுப்பவடி 45வயதும் சுந்தரிக்கு 40 வயதுமாக இருந்தது.

அவர்களால் வயதின் காரணமாக பலமுறை முயற்சித்தும் அவர்களால் ஒரு குழந்தையைப் பெற முடியவில்லை. சில ஆண்டுகளாக அவர்கள் கவலையுடனேயே இருந்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல, கவலையை மறக்கத் தொடங்கிளார்கள்.இந்த நிலையில்தான் மாங்கதிர் கிரகவாசிகள் அவசர்களிருவரையும் தங்கள் கிரகத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள்.

மாங்காதிர் கிரகவாசிகளில் அதிகாரிகள் பொல தோன்றிய ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் கழந்தைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார்கள்.

“நீங்கள் பூமியில் இருந்த போது உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இங்கு இயல்பாகவே உங்களுக்கு உறவு கொள்ளும் ஆசை ஏற்படும். இயல்பான கரித்தரிப்பு மூலம் உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்.

பூமியில் உள்ளது பொல இக்கிரகத்திலும் ஆண் பெண் வித்தியாசம் உண்டு.அதனால்தான் இங்கு இருப்பது உஙகளுக்கு பூமிலிருப்பது போன்ற சூழலை ஏற்படுத்துகின்றது.

நீங்களிருவரும் இங்கு சாப்பிடும் உணவுகள் வித்தியாசமானவை, இயற்கையானவை. அதனால் உங்கள் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். சூது, வஞ்சகம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனம் இனி உங்களிடம் இருக்காது.

உங்களுக்குப் பிறக்கப் போகும் ஆண்குழந்தை வெகு வேகமாக இளைஞனாவான். அவனே பூமியை அழிக்கப் போகிறவன்” என்று சொன்னதும் அவர்களிருவரும் அமைதியாக இருந்தார்கள்.

மாங்கதிர் கிரகவாசிகளான அந்த ஆணும் பெண்ணும் மாறி மாறி அவர்களுக்கு” பூமியை ஏன் அழிக்க வேண்டும் என்ற விபரரத்தை தொடர்ந்து சொன்னார்கள்.

“பலவாயிரம் ஆண்டகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த மனிதரிடம் நேர்மையும் மற்றவர்களுக்கு தீங்கிழைனக்காத மனமும் இருந்தது.பூமி புனித இடமாக இருந்தது. பிறகு வந்த வந்த மனிதர்கள் தமது மனதில் அழுக்கை நிரப்பிக் கொண்டார்கள்.

இப்பொழுது பூமியில் வாழும் மனதர்கள் மிகவும் மோசமாகிவிட்டார்கள். அங்க நல்லவரும் இருக்கிறார்கள். அவர்கள் கஸ்டப்படுகிறார்கள். பூமி அழிக்கப்படும் நாளில் நல்லவர்கள் அனைவரும் ஒரே இரவில் அங்கிருந்து அழைத்து வரப்பட்டு வேறொரு கிரகத்தில் குடியேற்றப்படுவார்கள். அக்கிரகத்தைப் பார்ப்பதற்காக இன்னும் சில நாட்களில் உங்களை அங்கு அழைத்துச் செல்வோம்” என்று கூறிய அவர்கள் விடைபெற்றுச் செல்ல இரு பெண்கள் சாமியையும் சுந்தரியையும் நோக்கி சிரித்தபடியே வந்தார்கள், வந்தவர்கள் ” இன்று உங்களிருவருக்கும் இக்கிரகத்தில் முதலிரவாக நீங்கள் உணர்விர்கள்.பூமியல் முதலிரவையும்,

அதற்குப் பிறகு எத்தனையோ இரவுகளைக் கண்டிருப்பீர்கள்.

ஆனால், இன்று உங்களுக்கு திருமணம் போன்ற ஒன்று நடத்தி வைக்கப்படும்.பூமியிலிருந்து போது இருந்த உடலில் ஏற்படும் மூப்பு மறைந்து நடக்கப் போகும் சடங்கினால் நீங்கள் இருவரும் புதிய இளைஞனாகவும் யுவதியாகவும் உடல் தோற்றம் பெறுவீர்கள் என்று அவர்கள் சொன்னதும் சாமியும் மகிழ்ச்சியடைந்தார்கள்;.

மாங்கதிர் மனிதர்கள் அவர்களுக்கு விதம் விதமான உணவுகளைக் கொடுத்தார்கள். பூமியில் அது போன்ற உணவுகளை சாமியும் சுந்தரியும் உண்டதேயில்லை.

பூமியில் மாமிசம் மச்சம் சாப்பிட்டவர்களுக்கு இது மாமிசமோ மச்சமோ அல்ல என்பதும் புரிந்தது.

பூமியைப் போலவே ஒரு கிரகம் மரம் செடிகள் கொடிகள் மட்டுமே வித்தியாமாகவிருந்தன. அவர்களின் பார்வைக்குள் எந்தவொரு மிருகங்களும் புலப்படவில்லை.

இரண்டு நாட்களாக விதம் விதமான உணவுகளை உண்ணக் கொடுத்தார்கள். அவர்கள் நித்திரை கொண்ட

அறையில் இருந்த கண்ணாடியில் அவர்களிரும் தங்களைப் பார்த்த போது அதிர்ச்சிளயடைந்து மகிழ்ச்சி கொண்டார்கள்.

பூமியில் அவர்களிருவரும் திருமணம் செய்த போது எவ்விதமான இளமையிலிருந்தார்களோ அதற்கும் மேலாக இளமையாக இருந்தார்கள்.சுந்தரி தான் கன்னிகழியாத பெண்ணாக இருப்பதை தனது உடலின் உணர்வு மூலம் உணர்ந்தாள்.

இரண்டு நாட்களின் பின் திருமணம் போன்ற ஒன்றைச் செய்து வைத்தார்கள். மாங்கதிர் கிரகத்தில் இரவு நேரங்களில் பூமியில் பார்ப்பது போல ஒரேயொரு சந்திரனையும் நட்சத்திரங்களையுமே பார்க்க முடியாது ஆகாயமெங்கும் விதம் விதமான நிறங்களில் பெரிய பெரிய கிரகங்களைப் பார்க்க முடியும்.அதனால் இருட்டென்பது அங்கு வெளிச்சமமாகவே இருக்கும்.

திருமணம் நடந்த இரவு அவர்கள் இருவருக்கும் முதலிரவாகும். பூமியல் வாழ்ந்த காலங்களில் நினைப்புகள் அழிந்து போகாமலும் அதே வேளை மாங்கதிர் வாழ்க்கை முறையை அவர்கள் வாழத் தொடங்கினர்.

முதலிரவு அவர்களுக்கு இன்னொரு புதிய அனுபவமாக அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *