Sunday, January 21, 2018

.

தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து! … ( வீடியோ )

தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து! …  ( வீடியோ )

 

பிரிட்டனுக்குப் பெருமை சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்று தம்முடைய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரிட்டீஷ் பிரதமர்  தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். ‘வணக்கம்’ என்று தொடங்கும் தம்முடைய பொங்கல் வாழ்த்துச் செய்தியை அவர் காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் பல நிலைகளில் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாக தமிழர்கள் விளங்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் மட்டுமல்லாது உலகமுள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *