Sunday, January 21, 2018

.

அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது அவதூறு கருத்து: டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி!

அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது அவதூறு கருத்து: டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி!

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் மீது அவதூறு கருத்து கூறினார் என்ற குற்றச்சாட்டால் டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தி உள்ளன.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்பை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 11-ந் தேதி சந்திக்க சென்று இருந்தனர்.

குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்வது தொடர்பாக, அவர்கள் பேசச்சென்று இருந்துபோது, அவர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “அந்த ஆசனவாய் நாடுகளில் இருந்து வந்த மக்களை நாம் ஏன் இங்கே வைத்திருக்க வேண்டும்? அவர்களுக்கு பதிலாக நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருகிற குடியேறிகளை நாம் வைத்துக்கொள்ளலாமே? நமக்கு இன்னும் கூடுதலான ஹைதி நாட்டினர் எதற்காக வேண்டும்? அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்று கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.சர்ச்சைக்கு உரிய இந்த அவதூறு கருத்தை வெளியிட்டதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது, ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்தனர்.

டிரம்புக்கு எதிராக இப்போது ஆப்பிரிக்க நாடுகள் பலவும் போர்க்கொடி தூக்கி உள்ளன. அவர் தனது அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று அவை வலியுறுத்துகின்றன.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலக செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கால்வில்லே கருத்து கூறியபோது, “நீங்கள் (டிரம்ப்) இப்படி ஒட்டுமொத்த நாடுகளையும், கண்டங்களையும் கூறி விட முடியாது. நான் வருந்துகிறேன். இத்தகைய வார்த்தைகளை ஒரு இன வெறியர் தவிர்த்து மற்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

நியூயார்க் நகரில் ஐ.நா.வுக்கான ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் அவசரமாக கூடினர். அவர்கள் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்காக டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

55 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு உள்ள ஆப்பிரிக்க யூனியனின் வாஷிங்டன் தூதரகம் டிரம்பின் கருத்து பற்றி கூறுகையில், “இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சீற்றத்தை ஏற்படுத்துகிறது. டிரம்ப் நிர்வாகம், ஆப்பிரிக்கர்களை தவறாக புரிந்து கொண்டு உள்ளது. அமெரிக்க நிர்வாகத்துக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே பேச்சு நடத்திய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டது.

ஹைதி அரசு, “ஹைதி சமூகத்தினர் மீதான இனவெறி கருத்தாக டிரம்பின் கருத்து அமைந்து இருக்கிறது” என்று கூறியது.எல் சல்வேடார் நாடு, தனது எதிர்ப்பை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், “ டிரம்பின் கருத்துக்கள் மிகவும் மோசமானவை. இத்தகைய தரக்குறைவான கருதினை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்” என்று கூறியது.

மொராக்காவில் உள்ள ஆப்பிரிக்க ஆய்வாளர் ஆடமா கயே, “ஆப்பிரிக்கா மீதும் அதன் மக்கள் மீதும் டிரம்ப் தொடர்ந்து தனது இனவெறியை காட்டி வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் டிரம்பின் கருத்தை பல தரப்பினரும் வன்மையாக சாடி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஹைதியை சேர்ந்த ஒருவர் டுவிட்டரில், தனது நாட்டின் இயற்கை அழகை சித்தரிக்கும் படத்தை வெளியிட்டு, அத்துடன் டிரம்பை, ஆப்பிரிக்க நாட்டினருக்கு எதிராக அவர் கூறிய அதே வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *