Sunday, January 21, 2018

.

விடியல் பொங்கல்!.. தமிழ்மகள் பரா.

விடியல் பொங்கல்!.. தமிழ்மகள் பரா.

வியர்வையை மண்ணில்
விதைத்து ../வெற்றியாக 
அறுவடைக் கதிரறுத்து
புது அரிசியும்..புத்துணர்வும்
தரும் உழைப்பாளி உழவர்க்கும்
உலக உயிரினம் வாழ
கதிர் ஒளிபரப்பி காக்கும்
#கதிரவனுக்கும் நன்றி
செலுத்தியே பொங்குவோம்
#சூரியப்பொங்கல்!

அன்பு என்னும் பால்
ஊற்றி ../,ஒற்றுமை என்ற
ஓர்மப் பானையில்
தாயகம்,, தேசியம்,,தன்னாட்சி .
என்ற மூன்று [அடுப்பாக]
கொள்கை சுமந்து../
உணர்ச்சியெல்லாம்
நெருப்பாக கனன்று
பொங்கி வழியட்டும்
#தாய்த்தமிழ் #பொங்கல்

அரிசி. சர்க்கரை,பயறு ,
தேன்நெய் முந்திரி கயூ
என்று பலரகமாய் சேர்த்து
ஒருகுடையில் சங்கமித்து
கும்மி ../பறை அடித்து
பண்பாட்டுத்தமிழர்
நாம் பொங்குவோம்
#தன்மானப் #பொங்கல்

அடிக்கரும்பின் தித்திப்பாய்
வழி ஒன்று அமையட்டும் ../
விழி இருந்தும் வழிதெரியா
தமிழர் நம் வாழ்வும் விடியலும்
முகிழ்த்து வரும் இத்திருநாளில்
தமிழால் இணைந்து../
தமிழால் தமிழரை வாழ்த்தி ../
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நம்
இனிய தைப்பொங்கலில்
பொங்குவோம் பொங்குவோம்
#விடியல் #பொங்கல்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *