Sunday, January 21, 2018

.

இந்தியாவுடன் இணைந்தே வென்றோம் என்கிறார் கோத்தா!

இந்தியாவுடன் இணைந்தே வென்றோம் என்கிறார் கோத்தா!

இந்தியாவுடன் இணைந்து யுத்த வெற்றிக்கான இராணுவ தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, விடுதலைப் புலிகளை தோற்கடித்து, யுத்த வெற்றியை பெற்றோம் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக, கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்பிருந்த தலைவர்களும், அரசாங்கங்களும் முன்னெடுத்தன.

எனினும் புலிகளை தோற்கடிக்கவோ, அல்லது முடிவுக்கு கொண்டுவரவோ எவராலும் முடிந்திருக்கவில்லை.

இவ்வாறான சூழலில், 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் தொடர்ந்த யுத்தத்தை, அதனை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை,

3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். இத்தகைய வெற்றிக்கு காரணம், புலிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுத்ததோடு சரியான தலைவர்களையும் உருவாக்கியமையே ஆகும்.” எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *