Sunday, January 21, 2018

.

கேரளா கொலைக்கும் புலிகளுக்கு தொடர்பா?

கேரளா கொலைக்கும் புலிகளுக்கு தொடர்பா?

கேரளாவில் நடந்த படுகொலை வழக்கு ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என  சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

கேரளாவில்  ஹோட்டல் மற்றும் மதுபான விடுதி ஒன்றின் உரிமையாளர் மிதிலா மோகன் என்பவர்  கடந்த 2006ம் ஆண்டு அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் முதல் சந்தேக நபராக கருதப்படும் சந்தோஷ் குமார்  கைது செய்யப்பட்டுள்ளார்.  ஆனாலும் 11 ஆண்டுகளாக நடந்து வந்த  இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதை கேரள போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மிதிலா மோகனின் மகன் மனீஷ் , “11 வருடங்களுக்கு பிறகு  இந்த வழக்கு தொடர்பாக அளித்துள்ள விவரங்கள் தெளிவாக இல்லை, வழக்கின் தற்போதைய நிலை என்ன? குற்றவாளிகளை பிடிக்க விசாரணைக் குழு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்ற கேள்விகளோடு, சி.பி.ஐக்கு வழக்கை  மாற்ற வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி  கடந்த வியாழக்கிழமை  உத்தரவிட்டது.  மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ-க்கு, கேரள அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம்  அறிவுறுத்தியது.

குறித்த வழக்கின் 2 மற்றும் 3வது குற்றவாளிகளான மதிவண்ணன் மற்றும் உப்பலி ஆகிய இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என  கேரள மாநில சி.பி.சி.ஐ.டி சந்தேகிக்கின்றது. இதன் காரணமாக அவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்திருக்காலம் என்றும் கருதப்படுகின்றது. ஆனால், முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார் மற்றும்  உப்பிலி ஆகிய இருவரும் தமிழ் நாட்டின் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர்கள் என மதிவண்ணன் தன்னுடைய  வாக்கு  மூலத்தில் தெரிவித்துள்ளார். இப்படி பல்வேறு குழப்பங்கள் இந்த வழக்கில் நீடிப்பதால், சி.பி.ஐ-க்கு மாற்றி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *