Sunday, January 21, 2018

.

இனம் காத்து நிற்கும் இனிய பொங்கல்!… சங்கர சுப்பிரமணியன்.

இனம் காத்து நிற்கும் இனிய பொங்கல்!… சங்கர சுப்பிரமணியன்.

அரிசியும் பருப்பும் இனிப்பும் சேரும் பொங்கல் போல்

நம் வாழ்வில் அன்பும் இரக்கமும் கருணையும் பொங்கட்டுமே
உழைத்து சோறிடும் உழவன் இன்று உழைக்க முடியாதிருக்க
நமக்கேன் கவலை என்ற நிலை உள்ளோர் மனமும் மாறட்டுமே
மதத்திற்கு என்றொரு புத்தாண்டும் வெகுகாலம் இங்கிருக்க
தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு மற்ற மொழிகளைப்போல்
தைப்புத்தாண்டும் தமிழ்ப்  புத்தாண்டாய் மலரட்டுமே
திருவள்ளுவர் ஆண்டாய் ஐயன் பெயர் சொல்லி உலவட்டுமே
மதச்சண்டை சாதிச்சண்டை எனும் மடமைகள் எல்லாம் மங்கி
நாம் எல்லாம் ஓரினம் மானமுள்ள தமிழினம் என்றநிலை வளரட்டுமே
பண்பாட்டோடிணைந்த மாட்டுடன் காதலை வதை எனும்நிலை ஒழியட்டுமே
பண்பாட்டினை மறந்து பாழாகும்நிலை மறையட்டுமே
பணமே குறியாக  இனம் ஒழிக்கும் கும்பல் இல்லாது போகட்டுமே
இனமே உயிரைன எல்லாமிழந்த மக்கள் இன்புற வழி பிறக்கட்டுமே
மக்கள் வாழ்வதனை மாண்புறச் செய்யும் மாற்றாட்சி விடுயட்டுமே
பொங்கல் பொங்கி வழிவதுபோல் பொங்கு தமிழ் செழிக்கட்டுமே
பொங்கலோ பொங்கிவரும் தைப்பொங்கல்
மங்களமாய் நம்வாழ்வில் மகிழ்வு தரும் பொங்கல்
எங்கும் இவ்வுலகில் நிறைந்திருக்கும் எம்  தமிழரது பொங்கல்
பொங்கிடவே இன்பம் மடைதிறந்த வெள்ளமென வாழ்த்துகிறேன் நானும்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *