Sunday, January 21, 2018

.

இவ் வருட முதல் வாரத்தில் 948 டெங்கு நோயாளர்கள்: ஆஸி. உதவியை நாட அனுமதி

இவ் வருட முதல் வாரத்தில் 948 டெங்கு நோயாளர்கள்: ஆஸி. உதவியை நாட அனுமதி

இவ் வருடத்தின் முதல் வாரத்தில் 948 டெங்கு நோயாளர்கள் வரை இனங்காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்ப வாரத்துடன் ஒப்பிடுகையில் இது குறைந்தளவானது என, அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ‘Wolbachia´ என்ற பக்ரீரியாவின் உதவியுடன் டெங்கு நுளம்பை ஒழிக்கும் வேலைத் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசின் உதவியுடன் முன்னெடுக்க, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

டெங்கு நுளம்புகளை ஒழிப்பது தொடர்பில் “Wolbachia´ பக்ரீரியாக்களை பயன்படுத்தும் முயற்சி அவுஸ்திரேலியாவின் மொனெஸ் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமான பரீட்சிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறை அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, வியட்நாம், பிரேசில் மற்றும் கொலாம்பியா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கொழும்பின் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *