Thursday, January 18, 2018

.
Breaking News

சுதந்திரத்தின் 70 வது ஆண்டை இணைந்து கொண்டாடும் இந்தியா- இலங்கை

சுதந்திரத்தின் 70 வது ஆண்டை இணைந்து கொண்டாடும் இந்தியா- இலங்கை

இந்தியா, இலங்கையும் 70 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக  இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் ஜனவரி 17 அன்று சிறப்பு கலாச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

‘பாலிவுட்டும் அதற்கு அப்பாலும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரபல பாலிவுட் பாடகர் கவிதா கிருஷ்ணமூர்த்தி, வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம், இசையமைப்பாளர் பிந்து சுப்ரமணியம் உள்பட பல முக்கிய இசைக் கலைஞர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலாச்சார நிகழ்வு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *