Saturday, February 24, 2018

.
Breaking News

விடுதலைப் போராளி தமிழினியின் நினைவுவணக்க நிகழ்வு- மெல்பேர்ன்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை மகளீர்பொறுப்பாளராக, முன்னர் பணியாற்றிய தமிழினி ஜெயக்குமரன் அவர்கள்,கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 – 10 – 2015 அன்று, புற்றுநோய் காரணமாகசாவடைந்திருந்தார்.

பதினெட்டு ஆண்டுகாலமாக தமிழின விடுதலைக்காக உழைத்த ஒப்பற்றபோராளியாக, ஆற்றலுள்ள அரசியல் துறைப் பொறுப்பாளராகபணிசெய்திருந்தார் தமிழினி.

மலையகத்தை தனது சொந்த இடமாக கொண்டிருந்த தமிழினி, வன்னியில்வாழ்ந்துவந்தபோது, தமிழர்களின் விடுதலைக்கான உன்னதமான பணிக்காகதன்னை இணைத்து, இறுதிவரை அதற்காகவே போராடிவந்தார்.

எமது மண்ணில் நிகழ்ந்த கொடிய பேரழிவின் இறுதிநாட்களில், சிறிலங்காஇராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்டு, புனர்வாழ்வு என்ற பெயரில் கொடியஅடக்குமுறைகள், இவர்மேலும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அதன்பின்னர் நயவஞ்சக திட்டத்துடன் இவரை தேர்தலில் போட்டியிடுமாறும்,அதன்பின்னர் விடுதலை செய்வோம் எனவும் மகிந்த இராசபக்சஅரசாங்கத்தினால் கேட்கப்பட்டார்.

எனினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் விடுவிக்கப்பட்டுவாழ்ந்துவந்தபோதே அவரிற்கு புற்றுநோய் வந்திருந்தமை கண்டறியப்பட்டது.

அந்தவேளையிலும் வெளிநாடு ஒன்றிற்கு வந்து, இனவழிப்பு பற்றிய சாட்சியம்ஒன்றை பதிவு செய்வதற்கு அவர் தயாராக இருந்தபோதும், அதற்கானவாய்ப்புநிலைகள் உருவாகியிருக்கவில்லை.

இவ்வாறு நெருக்கடியான காலகட்டத்திலும், விடுதலைப்போராட்டத்தின்நியாயத்திற்கான பக்கங்களை, தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தார் தமிழினி.

விடுதலைப்போராட்ட காலங்களில், எமது போராளிகளை இழந்ததுபோல,அதற்கு பின்னரான காலப்பகுதியிலும், சிறைகளில் வைத்தும் சதிவலைகளில்சிக்கவைத்தும் நீண்டகால போர்க்காயங்களை குணப்படுத்தமுடியாமலும் பலபோராளிகள் இழக்கப்பட்டு வருகின்றார்கள்.

எமது விடுதலைப்போராட்டத்தின் முக்கிய குறியீடாக, பல பணிகளை இன்னமும்செய்யக்கூடிய வலுநிலையிலிருந்த தமிழினி ஜெயக்குமரனின் இழப்பு,அனைத்து தமிழ்மக்களையும் கவலைகொள்ளச்செய்துள்ளது.

உன்னத விடுதலைக்காக, தன்பணியை செய்துநின்ற தமிழினியின் நினைவுவணக்க நிகழ்வு ஒன்றை, மெல்பேணில் நடத்துவற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன்அழைக்கின்றோம்.

காலம் – மாலை 3 மணி ஞாயிற்றுக்கிழமை 25 – 10 – 2015

இடம் – Vermont South Community Centre

தொடர்புகளுக்கு – 0433002619

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோரியா

———————–
தமிழினி அக்காவின் நினைவுநிகழ்வும் த.ஒ.குழுவின் ஒன்றுகூடலும்
அன்புடையீர்,
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிதொடக்கம் 4 மணிவரை அண்மையில் மரணித்த தமிழினி அக்காவின் நினைவுவணக்க நிகழ்வு நடைபெறுகின்றது. அந்நிகழ்வு முடிவடைந்ததும் த.ஒ.குழுவின் மாவீரர் நாளுக்கான ஒன்றுகூடல் 4-6 மணிவரை நடைபெறும்.

அனைவரும் இயன்றவரை பங்குபற்றவும். தமிழினி அக்காவின் நினைவுநிகழ்வு பற்றிய அறிவித்தலை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இடம்: Vermont SOuth Community centre.
நாள்: ஞாயிறு 25Oct.
Time: 3 PM
———————–


மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

About The Author

Related posts