Sunday, January 21, 2018

.
Breaking News

விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கும் கமல்!

விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கும் கமல்!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘சாமி 2’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்.

‘மகாவீர் கர்ணா’ என்ற இந்திப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். இப்படம் சுமார் 300 கோடி பொருட்செலவில் உருவாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் எம்.செல்வா. ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘உத்தமவில்லன்’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி ‘தூங்காவனம்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதி என்றும், கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் குறித்து ராஜேஷ் எம்.செல்வா மறுத்து கருத்து எதுவும் தெரிவிக்காததால், இச்செய்தி உண்மை என்றே கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *