Sunday, January 21, 2018

.

கூடியிருந்த காலங்கள் மீண்டும் வருமா?

கூடியிருந்த காலங்கள் மீண்டும் வருமா?

சொந்தங்கள் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தோம்
சொர்க்கம்தான் நம்வாழ்வு என்றிருந்தோம்
சுதந்திரத்தேசம் எமதென்று இறுமாப்பு 
கொண்டிருந்தோம் ..

கட்டிய கோட்டைகள் சிதைந்ததாய்
கதறியது எம் தேசம் பதறியது நெஞ்சம்
கதியின்றி வழியின்றி கூட்டைத்தாண்டி
பறந்த பறவைகளானோம்..

பாரினில் நாமில்லாத நாடென்று ஒன்றுமில்லை
எமதென்று சொல்லிக்கொள்ள எமக்கொரு நாடில்லை
கூடிவிட்டு பறந்த பறவைகள் கூடு வந்து சேருமா
கூடியிருந்த அந்தக்காலங்கள் மீண்டும் வருமா?

 

வானளாவிய கற்பக விருட்சங்களே கேளுங்கள்
வழிந்தோடும் கண்ணீரின் கதை சொல்லிடவா
புதைந்துபோன காதலின் சிதையில் தீக்குளித்திடவா
பிறந்தமண்ணை சுற்றிவரும் ஆவியாகவே மாறிடவா..

ஏக்கத்தோடு
ரதிமோகன்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *