Sunday, January 21, 2018

.

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்!

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்!

அன்றைய காலங்களில் யாழ்ப்பாணத்து கள்ளுக் கொட்டில்களில்தான் ‘சமத்துவம்’ முழுதாக அமுல் படுத்தப்பட்டது. சின்னவிக்கும் விதானை நமசிவாயகத்துக்கும் கொட்டிலில் ஒரே ‘பிளா’தான். பிளா, யாழ்ப்பாணத்தானின் மகத்தான கண்டு பிடிப்பில் ஒன்று. பனை ஓலையை வெட்டி மடித்து, கை பிடிக்க வசதியாக ஒரு பக்கத்தில் வால் விட்டு செய்தால், அது பிளா. இது கள்ளுக் குடிக்கப் பாவிக்கப்படும். பனை ஓலையை பக்கவாமட்டில் மடித்து மூடிக் கட்டினால், அது குடலை. இது கிராமப்புறங்களில் இறைச்சி, வெள்ளரிப்பழம் என்பவற்றை காவிச்செல்ல பாவிக்கப்படும். முற்றிய பனை ஓலையை பிளாபோல் மடித்து, வாலை பக்கவாட்டில் மடித்துக் கட்டினால், அது தட்டுவம். இது சோறு தின்னப் பாவிக்கப்படும். தோட்டத்தில் புகையிலை அறுவடை செய்வதற்கு முன்னர் படையல் வைப்பதும் இந்த தட்டுவத்தில்தான்.

பனையும் அதன் பானமும் அவற்றை உண்டு தமிழிலே களிப்புற்ற பாணருமே நமது தமிழ்க் கலை இலக்கிய வடிவங்களுக்கு முதன் முதலாக வடிவமும், வகையும், சுவையும் அளித்தனர். பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவைஞர்களுடன் பங்கிடுவதற்கு, ‘உற்சாக பான’மாகக் கள்ளே பயன்பட்டது. இதனால்தான் சங்க காலத்திலே தமிழின் படைப்புக்கும் சுவைக்கும், ஊடக பானமாக விளங்கிய கள், மது வகையிலே சேர்க்கப்படாது உணவு வகைகளிலே சேர்க்கப்பட்டதாக உசாத் துணை நூல்கள் சொல்கின்றன.

உண்மைதான்! பரம உண்மைகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உருவானவைதான் குறியீடுகளும் மரபுத் தொடர்களும்.

இந்த வகையில் ‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’ என்ற சொற்தொடர் இன்றும் என் நெஞ்சிலே முகங்காட்டி மறைகிறது.
ஆசி கந்தராஜா.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *