Sunday, January 21, 2018

.

மட்டக்களப்பு காத்தான்குடியில் மூன்றாம் சமாத்து புன்னகை நூல் வெளியீட்டு விழா!

மட்டக்களப்பு  காத்தான்குடியில்  மூன்றாம் சமாத்து புன்னகை நூல் வெளியீட்டு விழா!

தானும் ஒரு கவிஞன் என்று வார்த்தைகளைத் தேடிப்பிடித்து சேர்க்கின்ற கவிஞர்கள் மத்தியில் உணர்வுகளை கவிதையாக்கும் உண்மைக்கவிஞனாக காத்தநகரான் எம்.ரி.எம்.யூனுஸ்சைக் காண்கிறேன். என கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி தெரிவித்தார்.
காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் காத்தநகரான் யூனுஸ் எழுதிய மூன்றாம் சாமத்து புன்னகை கவிதை நூல் வெளியீட்டுவிழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநோசன் கலந்து கொண்டார். நூலின் முதற்பிரதியினை புரவலர் ஏ.எல்.மீராசாஹிபு பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் அறிமுகத்தை விரிவுரையாளர் ஏ.எல்.எம். றிசாத், நூல் வெளியீட்டுரையினை கவிஞர் முகைதீன் சாலி, நூல் நயவுரையினை பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
அங்கு நூல் வெளியீட்டுரையினை நிகழ்த்திய கவிஞர் முகைதீன் சாலி….
காத்தநகரான் யூனுஸ்சின் கவிதைகள் தனித்துவமானவையாகும். 116 பக்கங்களைக் கொண்ட மூன்றாம் சாமத்து புன்னகை கவிதை நூல் 92 பக்கங்களை கவிதைகளால் நிரப்புகின்றது. இதில் காயங்களை கவிதையாக்கும் யூனுஸின் இறக்கை எனும் தலைப்பை கொண்ட கவிதை  மூன்றாம் சாமத்து புன்னகை மீதான நீண்டவாசிப்பை நிறுத்தியிருக்கின்றது.


உலகமே உறங்கும் வேளை கவிஞன் கண்திறக்கிறான். கவிஞர்களால் மாத்திரமே மூன்றாம் சாமத்து இரவிலும் புன்னகைக்க முடிகின்றது. புன்னகைகளை புரியவைக்கவும் முடிகின்றது.
ஒரு கவிஞனின் உணர்வு என்பது உகம் உறங்கிய நிசப்த பொழுதுகளில் துயர்படுகின்ற ஒரு புல்லாங்குழலின் நாதத்தை ஒத்தது. கவிஞனின் உணர்வுக் கடல் பொங்கியெழுகின்ற போது அது வார்த்தைக் கனையாக வெளிவருகின்றது. அதே வெளிப்படுத்தும் கவிஞனின் உத்தியாலேயே அவனது வெளிப்பாட்டுத்திறன் வெளிப்படுகின்றது. 
இன்று எது கவிதை? யார் கவிஞன்? என்ற கேள்வியும், விவாதமும் இலக்கிய உலகை ஆக்கிரமிக்கும் வேளையில் யூனுஸ்சின் கவிதைகள் காத்திரமானவையாகும் என்றார்.

செ.துஜியந்தன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *