Sunday, January 21, 2018

.

தமிழகத்தின் ஆதரவுக்கும் ஆப்பு வைக்கும் வேலை!

தமிழகத்தின் ஆதரவுக்கும் ஆப்பு வைக்கும் வேலை!
ஈழத் தமிழ் மக்கள் இன்றுவரை இந்தி யாவை நம்புகின்றனர் எனில் அதற்கான காரணம் எங்கள் தமிழகத்து உறவுகள் என் பது மறுக்க முடியாத உண்மை.
இலங்கை ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் தமிழினத்தை சங்காரம் செய்தபோதெல் லாம் துடிதுடித்துப் போனவர்கள் எங்கள் தமிழ கத்து உறவுகள் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
2009 வன்னி யுத்தத்தின் கொடூரம் கண்டு சகிக்க முடியாத சகோதரன் முத்துக்குமாரன் தன் உயிரைத் தியாகம் செய்து ஓ! உலகமே என் ஈழத் தமிழ்ச் சகோதரர்களைக் காப்பாற்று என விடுத்த அறைகூவல் சாதாரணமானதன்று.
இது உதாரணத்துக்கு ஒன்று. சகோதரன் முத்துக்குமாரன் போல எத்தனையோ தமிழ கத்து சகோதரர்கள் ஈழத் தமிழ் மக்களுக் காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.
இது மட்டுமல்ல தமிழகத்தின் அரசியல் தலைவர்களான வை.கோபாலசாமி, பழ.நெடு மாறன், தம்பி சீமான் என எத்தனையோ பேர் எங்களுக்காகக் குரல் கொடுத்து சிறை சென்ற வரலாறுகளும் ஏராளம் உண்டு.
ஆக, தமிழகத்தின் முதலமைச்சராக இரு ந்த எம்.ஜி.இராமச்சந்திரன் ஈழத் தமிழினத் தின் வாழ்வுக்காக வழங்கிய நிதி உதவியை வேறு யாரும் செய்திருக்க முடியாது.
பின்னடி காலத்தில் எங்கள் தொடர்பில் கலைஞர் கருணாநிதி சரியான முடிவை  எடுக் கத் தவறினாராயினும் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருந்த ஈழத் தமிழ் அகதிகளை வர வேற்பதிலும் அவர்களுக்கான நலத்திட்டங் களைச் செய்வதிலும் கலைஞர் கருணாநிதி பின்னிற்கவில்லை.
அண்மையில் காலமான தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விடுதலைப் புலி கள் குறித்து எதிரான கருத்தைக் கொண்டிருந் தாராயினும் தமிழக சட்ட சபையில் எங்கள் தொடர்பில் அவர் கொண்டு வந்த தீர்மானங் கள் நினைத்துப் பார்க்க முடியாதவை.
வன்னி யுத்தம் தமிழின அழிப்பு என்றும் தனிநாட்டை வழங்குவது தொடர்பில் வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தமிழக சட்ட சபை நிறைவேற்றிய தீர்மானங்கள் என்றோ ஒரு காலத்தில் கவனத்தில் எடுக்கப்படும்.
நிலைமை இதுவாக இருக்கையில், இவர் கள் எவரையும் சந்திக்காத எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சசிகலா வின் உறவினரும் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே நகரில் வெற்றி பெற்றவருமான டி.டி.வி.தின கரனைச் சந்தித்ததும் அவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு நத்தார் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதும் எதற்கானது என்பது புரியாமலே உள்ளது.
எங்களுக்காகக் குரல் கொடுத்த வை.கோபால சாமியை ஓரங்கட்டி, சீமானை ஒதுக்கித்தள்ளி, கலைஞரின் சுகநலத்தை விசாரிக்காமல் புறந் தள்ளி வைத்துவிட்டு, தினகரனைச் சந்திப்ப தென்பது தமிழகத்தில் எங்களுக்கு இருக்கக் கூடிய ஆதரவை வெட்டிச்சரிக்கும் வேலையே யன்றி வேறில்லை என்று கூறுவதே சரியான தாகும்.
அட, கூட்டமைப்பின் தலைமை தினகர னைச் சந்தித்தது என்றால், தினகரனும் கூறுகி றார்; ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு தொடர்ந் தும் வழங்கப்படுமென்று.
போரில் எல்லாவற்றையும் இழந்த ஈழத் தமிழர்களுக்காக தினகரன் செய்த உதவி என்ன என்பதை அவர் கூறினால் அதுபோதும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
வலம்புரி.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *