Thursday, January 18, 2018

.
Breaking News

பன்முகம் பரப்பும் பண்பின் பரிணாமத்திற்கொரு பாமாலை!… சங்கர சுப்பிரமணியன்.

பன்முகம் பரப்பும் பண்பின் பரிணாமத்திற்கொரு  பாமாலை!… சங்கர சுப்பிரமணியன்.
மாமலையோ இவர் என எண்ணி நானும் வியக்கிறேன்
நாமிலைலையே இவர் போலென எண்ணி தவிக்கிறேன்
ஏனிலை அவ்வுந்து நிலை என்னிடமுமென உழல்கிறேன்
பாநிலை நின்றே பொருள் பதம் தருமென உணர்கிறேன்
இறை நம்பிக்கை என்பது இவரிடத்தில் மிகவும் ஏராளம்
குறை எதுவும் அதில் சொல்லேன் என்மனமோ தாராளம்
நிறையான தொடர்புக்கு பெரியார் மூதறிஞர் இலக்கணம்
அறைகூவி சொல்வதிலோ எனக்கும் இங்கு தலைக்கனம்
விண்ணிலே தென்படும் விண்மீன்களும் கண்ணிலடங்கா
மண்ணிலே இவர்தரும் படைபுக்களும் எண்ணிலடங்கா
பண்ணிலே பல நிறைந்திட்ட பரவசமும் சொல்லிலடங்கா
கண்ணிலே தவழ்கிற இவர் கவர்ச்சிநகை அழகிலடங்கா
அயல் மண்ணிலும் ஆளுகின்றார் தமிழ்தன்னை அரசாக்கி
புயல் தன்னிலும் உண்டென்கிறார் அத்தமிழயே கருவுமக்கி
இயல் இசை நாடகமென்ற முத்தமிழையே தனதும் ஆக்கி
கயல் நீந்தும் வைகையென ஓடுவார் வாழ்வை நயமாக்கி
சொற்பமாய் நின்றிங்கே சூத்திரமாய் இயங்கும் வாழ்வில்
கற்பனையாய் வாழ்வதுவும் சுழன்றிங்கு சென்றிடும்போது
விற்பன்னர் யாரிங்கென்று விழியகற்றி நோக்கி காணின்
பற்பலவும் படைத்ததினால் செப்பிடுவீர் சீலர் இவரென்றே!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *