Thursday, January 18, 2018

.
Breaking News

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் செயற்றிட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பம்

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் செயற்றிட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பம்
தெத்தூவ சுற்றுலா வலயம் என்ற பெயரில் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் செயற்றிட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில் இயற்கை சுற்றுலா கட்டமைப்பின் கூடுதலான ஒத்துழைப்புடன் சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் வலயம் ஸ்தாபிக்கப்படவிருக்கிறது. இதன் கீழ் ஆயிரத்து 800 ஏக்கர் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கு மேலதிகமான தென்மாகாணத்தில் சுற்றுலாப் பாடசாலை ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இது அமைக்க்பபடவிருக்கிறது. கூடுதலாக செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருப்பது இலக்காகும். இது தெற்காசியாவின் சிறந்த சுற்றுலா வலயமாக அமையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை காலி மாவட்டத்தில் அக்குறள, கொக்கல பிரதேசங்களும் சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. காலி ஒல்லாந்தர் கோட்டையும், காலி நகரமும் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. சிங்கராஜ வனத்தை பாதுகாத்து சுற்றுலா வலயம் அபிவிருத்தி செய்யப்படும் எனம்றும் பிரதமர் கூறினார்.
இந்த சுற்றுலா வலயத்திற்கான காணி nhடர்பான அறிக்கையை பிரதேச செயலாளர் பிரதமரிடம் கையளித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *