Sunday, January 21, 2018

.

நீக்கமற நிறைந்த உணர்வுகள்!…. கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்.

நீக்கமற நிறைந்த உணர்வுகள்!…. கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்.

# இது யார் போட்டப் பாதை
வளைந்து நெளிந்தாலும்
ஊருக்கு வழிகாட்டுகிறது

# கிழக்கு நோக்கி ஓடும் நதிக்குள்
ரகசியமாய் ஓர் அரவணைப்பு
கடலின் கைகள்

# மனதில் யார் யாரோ
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்
கோயில் திருவிழாவின் போது

# கை மீது கோலமிடும்
சித்திரம் காண தேடுகிறேன்
” கமர்கட் ” விற்பவனை

# தடயம் கூட இல்லை
நினைவுகள் மட்டும் அப்படியே
எனது ஆரம்பப் பள்ளி

# செல்லரித்த சின்னாளம்பட்டி சேலை
இன்றும் இரும்புப் பெட்டிக்குள்
அம்மாவின் நினைவுகளோடு

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *