Sunday, January 21, 2018

.

பொன் குலேந்திரன்!… கனடா.

பொன் குலேந்திரன்!… கனடா.

ஈழத்திலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பொன் குலேந்திரன்  அவர்கள்.

தொலை தொடர்பு துறையில்  (Telecommunication) சிரேஷ்ட பொறியியலாளராக இலங்கை,ஓமான், துபாய். அபுதாபி . சார்ஜா,லண்டன், அமெரிக்கா, ஒன்டாரியோ கனடா ஆகிய நாடுகளில் தொழில் புரிந்தவர். ஒன்டாரியோ மிசிசாகா நகரில் உள்ள பீல் முது தமிழர் சங்கத்தின் தலைவராக நான்கு வருடங்கள் இருந்து சமூக சேவை செய்தவர். இப்போதும் சங்கத்துக்கு  உதவி வருகிறார். பத்து வயதில் எழுத் தொடங்கியவர். இரு மொழி எழுத்தாளர். இவரது நூல்களை Amazon.comஇல் பார்க்கலாம்  

சமீபத்தில் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இவரது ‘முடிவு’ என்ற கதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. போட்டிக்கென்று  வந்த 440  கதைகளில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இப்பெருமை கனடா வாழ் முது தமிழர்களைப் போய் சேரும்.

இக்கதை கல்வி தரப்படுத்தல் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மாணவன் ஒருவனைப் பற்றியது.

இவரது இணையதளம்: 

 குவியம்கனடா.காம். ( KuviyamCanada.con

இவரது  “காலம்  ” என்ற 20 அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு டிசம்பரில் ஓவியா பதிப்பகம் வெளியிடுகிறது

இது தவிர “முதியோர் முத்துக்கள் முப்பது”  என்ற சிறு கதைகள் தொகுப்பு ஒன்றை தயாரித்துக்கொண்டிருக்கிறார். பல நாடுளில் இருந்து  முதிய எழுத்தாளர்கள்  எழுதிய  சிறு கதைகள் கொண்டது. 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *